Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்       

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


       

ஸ்ரீவைகுண்டம், ஆக.22: தூத்துக்குடி மாவட்டம் ,ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அரசியல் பழிவாங்கும் போக்கினை கண்டித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய தாலுகா அலுவலகம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவர் நல்லக்கண்ணு தலைமை வகித்தார். நகர தலைவர்கள் ஸ்ரீவை சித்திரை, பாலசிங், ஜேக்கப், மூக்காண்டி, ரபியூதின், ஐ.என்.டி.யு.சி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன் மத்திய அரசை கண்டித்து பேசினார்.
இதில், வட்டார தலைவர்கள் ஆழ்வார் கோதண்டராமன், சாத்தான்குளம் ஜனார்த்தனன், கருங்குளம் புங்கன், இளைஞர் காங்கிரஸ் ஜெயசீலன்துரை, இசைங்கர், பிச்சைக்கண்ணன், ஓபிசி மாவட்ட தலைவர் ஏரல்தாசன், முன்னாள் நகர தலைவர் சேதுபாண்டியன், சிவகளைபிச்சையா, ஊடகபிரிவு மரியராஜ், முத்துக்குமார், மதிசேகரன், பெருமாள், பொன்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo