Onetamil News Logo

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.

Onetamil News
 

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.


ஸ்ரீவைகுண்டம், 2020 ஜூலை 11 ;ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட  கெட்டியம்மாள்புரம், ஆதாலிகுளம், வெள்ளூர் கிராம பஞ்சாயத்துகளிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தனது சொந்த செலவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ., கொரோனா நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
வெள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விவசாய சங்க தலைவர் அலங்காரம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தனது சொந்த செலவில் கொரோனா நிவாரண உதவியாக பத்து கிலோ அரிசி ஒரு கிலோ துவரம்பருப்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில், யூனியன் சேர்மன் வசந்தா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் காசிராஜன், நகர செயலாளர் காசிராஜன், விவசாய சங்க சொர்ணபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், வாசுகிநடராஜன், பொன்ராஜ், வெள்ளூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்தையா, பஞ்சாயத்து தலைவர் குமார்பாண்டியன் ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர்கணேஷ்,  ஊராட்சி செயலாளர்கள் சுப்பையா, மாரியப்பன், சிங்கப்பன், வார்டு செயலாளர் ஆப்பிள்ராமசாமி மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo