Onetamil News Logo

பேட்மாநகரத்தில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிட திறப்புவிழா ;முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

Onetamil News
 

பேட்மாநகரத்தில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிட திறப்புவிழா ;முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.


ஸ்ரீவைகுண்டம்,2020 ஜூன்.1: தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்திலுள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கான மருந்து கட்டும் அறை, மருந்து சேமிப்பு அறைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் ரூ.31லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சத்யநாராயணன் தலைமையில் நடந்தது. பேட்மாநகரம் ஜமாத்தலைவர் முகம்மதுஅலி, உதவி இயக்குநர்களான மருத்துவர்கள் சுரேஷ், சங்கரநாராயணன், செல்வக்குமார்,  சந்தோஷம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்.ஏஞ்சலின்சௌமியா வரவேற்றார்.
விழாவில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் காசிராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜோசப் சந்திரசேகர், கிளைச்செயலாளர்கள் பேரூர் சிங்கப்பன், மாஹின், மாரியப்பன், பஞ்சாயத்து தலைவர்கள் பேட்மாநகரம் கபூர், பராக்கிரமபாண்டி சரவணன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், வாசுகிநடராஜன், ராமலெட்சுமி நாகராஜன், முன்னாள் நகர செயலாளர் பால்துரை, கால்நடை மருத்துவர்கள் ஆனந்தராஜ், தெய்வானை, சபரிநாதன், ஆய்வாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில், டாக்டர்.சுரேஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர்.ஏஞ்சலின்சௌமியா தலைமையில் மருத்துவமனை பணியாளர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo