Onetamil News Logo

கொங்கராயகுறிச்சி அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

Onetamil News
 

கொங்கராயகுறிச்சி அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம்


ஸ்ரீவைகுண்டம்  2019 ஆகஸ்ட் 18 ; கொங்கராயகுறிச்சி அரசு பள்ளியில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தேசியச் ஆயுஷ் குழுமம் மற்றும் மாநில ஆயுஷ் செயல்திட்ட குழுமம் இணைந்து, கருங்குளம் வட்டாரத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம்களானது, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி அறிவுறுத்தலின்படி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ பிரிவு சார்பில் வாரம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் தலைமை வகித்தார். ஆசிரியைகள் சாந்தா, பெல்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமில் சித்த மருத்துவர் செல்வக்குமார் கலந்துகொண்டு நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறியதாவது, நோய் எதிர்ப்பு திறன் தான் நம்மை காக்கும் கடவுளாகும். இளம்வயதிலேயே மாணவ, -மாணயர்கள் நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும் சத்தான நவதானிய உணவுகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக்கொண்டு அவற்றை உணவில் அதிகம் சேர்த்து உண்ணவேண்டும் என்றார். 
இதில், ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் இமானுவேல் நன்றி கூறினார் முகாமிற்கான ஏற்பாடுகளை சித்த மருத்துவ பணியாளர் மாரியப்பன் செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo