சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பங்கேற்பு
தூத்துக்குடி 2020 நவம்பர் 29 ; தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஆழ்வார்திருநகரி மல்லிகை மஹாலிலும் காவல்துறை அடையாள அணிவகுப்புடன் துவக்கி வைத்தார்.
இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காவல்துறை அடையாள அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி பேருந்து நிலையம், பெருமாள் கோவில், புதுக்குடி பாலம் வழியாக ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் வந்து நிறைவடைந்தது.
இந்த அணிவகுப்பில் ஸ்ரீவைகுண்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் நிலைய 12 உதவி ஆய்வாளர்கள், 37 காவல் ஆளிநர்கள் மற்றும் 2 ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள், 62 ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறை சார்பாக குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கி காவலர் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.
அதே போன்று ஆழ்வார்திருநகரி ஆர்.கே.ஆர் அகாடமி சார்பாக மல்லிகை மஹாலில் நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாமை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு அறிவுரைகள் வழங்கி காவலர் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஆழவார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஜீன்குமார், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், ஜெகநாதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆர்.கே.ஆர். அகாடமி நிறுவனர் பரியேறும் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.