ஸ்ரீவைகுண்டம் போலீசார், கூண்டோடு மாற்றப்படுமா? லட்சக்கணக்கான ரூபாய் மாமூல்? ஏழைக்கு ஒரு நீதி...பணக்காரருக்கு ஒரு நீதியா...? தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் நடவடிக்கை எடுப்பாரா?
ஸ்ரீவைகுண்டம் 2020 நவம்பர் 23 ;ஸ்ரீவைகுண்டம் போலீசார்,வருவாய் துறை அலுவலர்கள் கூண்டோடு மாற்றப்படுமா? லட்சக்கணக்கான ரூபாய் மாமூல்? ஏழைக்கு ஒரு நீதி...பணக்காரருக்கு ஒரு நீதி புலம்பும் பொதுமக்கள்.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் பகுதியை சுற்றி 20க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இருக்கின்றன.இந்த பகுதியில் பணி செய்யும் போலீசார் 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றிட வேண்டும் அதுபோல இந்த கல்குவாரிகள் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மாமூல் வழங்கப்படுகிறது.போலீசார் கேட்கவில்லையென்றாலும் மாமூல் சரியாக குறிப்பிட்ட நபர்களுக்கு சென்றுவிடுகிறது. அதுபோல தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் கிராம மக்களுக்கு அச்சுறுத்தம் வகையில் விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மணல் கொள்ளையும் போலீசார் அனுமதியோடு நடந்துள்ளது.அதே போல காவல் நிலையங்களில் முழுக்க முழுக்க கட்ட பஞ்சாயத்து நடைபெற்றுவருகிறது.தனிப்பிரிவு ஏட்டையா மீதும் புகார்கள் பலமாக இருக்கின்றது. இதில் கணிசமான பணம் யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கு நீதியை விற்றுவிடுகிறார்கள் என்று ஏழை மக்கள் புலம்புகின்றனர்.தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் நடவடிக்கை எடுப்பார் என்று சமூக ஆர்வலர் முருகன் நம்மிடையே தெரிவித்தார்.