புனித மதர் தெரசா பொறியியல் கல்லூரியில்
முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் முன்னாள் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்காக படிக்கும்போதே 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தின் அடிப்படையில் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அழைக்கப்பட்டு விருந்தினர் விரிவுரை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். பன்னாட்டு நிறுவனங்களிலும், முன்னணி நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றும் முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களுக்கு வழி காட்டும் வகையில் கல்லூரி நிர்வாகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கல்லூரியில் பயின்ற அனுபவங்களையும், பேராசிரியர்களின் பயிற்சி அளித்த விதத்தையும் விளக்கினார். மேலும், படிக்கும்போதே வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிமுறைகள், படிக்கும்போதே செயல் திறனை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது, தற்போது நிறுவனங்களில் உள்ள நவீன கட்டமைப்புகள், அதனை கையாளும் திறன் போன்றவற்றை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சி மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.
இந்நிகழ்ச்சியில், கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் முனைவர் முதல்வர் முனைவர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன், நிர்வாக மேலாளர் விக்னேஷ் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.