Onetamil News Logo

St. மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா! தூத்துக்குடி வாகைக்குளம் St. மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அன்னை தெரசா மனிதநேயத்துடன் அன்பால் அனைவரையும் அரவணைத்தவர். வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்

Onetamil News
 

St. மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அன்னை தெரசா பிறந்த நாள் விழா!


தூத்துக்குடி வாகைக்குளம் St. மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அவரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
                   அன்னை தெரசா மனிதநேயத்துடன் அன்பால் அனைவரையும் அரவணைத்தவர். வீடற்றவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நம்பிக்கையின் ஒளி விளக்காக திகழ்ந்தவர். அவர் ஏழை, எளிய மக்களுக்காக  தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர். அவரது 114வது பிறந்த நாள் ஆகஸ்ட்  26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
   தூத்துக்குடி வாகைகுளம் St. மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் அன்னை தெரசா பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு கல்லூரி இயக்குனர் முனைவர் ஜார்ஜ் கிளிங்டன், முதல்வர் முனைவர் ஞானச்சந்திரன் மற்றும் பேராசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர், இயந்திரவியல் துரை பேராசிரியர் மெக்லூரெட் அன்னை தெரசாவின் பெருமையை கூறுகையில், “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்“ என்பதற்கேற்ப அன்பால் இந்த உலகை வசப்படுத்திய பெண்மணி வேறு யாருமல்ல "புனிதர் அன்னை தெரசா "மதர் தெரசா அவர்களின் தியாகத்தை, மனித நேய சேவையை பற்றி எடுத்துரைத்தார். 
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் முனைவர் விக்னேஷ் செய்திருந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo