தூத்துக்குடி வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் வென்றது
தூத்துக்குடி 2022 செப் 23; தூத்துக்குடி வட்டார அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகளில் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் வென்றது. வட்டார அளவிலான போட்டிகள் கடந்த 6ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தூத்துக்குடி ஹார்பர் ஹையர் செகண்டரி பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டது. இதில் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. இதில் கால்பந்து யூ 14 மாணவர்கள் இரண்டாம் இடமும்,யூ 19 முதல் இடமும், வாலிபால் 14 நபர்கள் முதல் இடமும் கூடைப்பந்து 14 முதல் இடமும் யு 17 ,யூ 19 இரண்டாம் இடத்தையும் கைப்பந்து யூ 17 , யூ 19 பிரிவின் முதல் இடத்தையும், இறகு பந்து போட்டியில் யூ 17 ,யூ 19 இரட்டையர் பிரிவில் முதல் இடத்தையும் மேஜை பந்து போட்டியில் யூ 14, யூ 17, யூ 19 பிரிவில் இரண்டாவது இடமும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குனர் தினேஷ், எபனேசர் கிரேஸ் பாரிஜா உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி தாளாளர் அருட்தந்தை ராயப்பன், பள்ளி முதல்வர் ஆஸ்கர் போன்றோர் பாராட்டினார்கள்,