Onetamil News Logo

தூத்துக்குடி அருகே ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் 

Onetamil News
 

தூத்துக்குடி அருகே ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் 


தூத்துக்குடி 2020 ஜனவரி 23 ; தூத்துக்குடி அடுத்த வாகைகுளம் ராஜலெட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. 
தூத்துக்குடி அடுத்த வாகைக்குளம் திருவள்ளுவர் நகர் பகுதியில் இயங்கிவரும் ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜலெட்சுமி கல்வி குழுமத்தின் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான பி.ஏ.ஆறுமுக நயினார் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்.  ராஜலெட்சுமி கல்வி குழுமத்தின் கல்வி குழுமச் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜதுரை வரவேற்றார்.  இந்த இந்த கருத்தரங்கில் வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி பல்கலைக்கழகத்தின்  வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் டங்ஸ்டன் ராஜ்குமார் கருத்தாளராக பங்கேற்று கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்து நல்லதொரு வேலைவாய்ப்பைப் பெறுவது குறித்தும் மாணவ,மாணவிகள் தங்களது வாழ்க்கைத் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் free online course மூலமாக குறைந்தது 10திறன்களையாவது வளர்த்து தங்களது கல்வித் தகுதிகளை அதிகரிபப்து குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மாலையில் நடைபெற்ற அமர்வில் எஸ்.ஆர்.அக்குவா போரம் உரிமையாளர் ஆல்வின் ஜெபஸ்டின் பங்கு பெற்று தொழில் முனைவோரின் எதிர்பார்ப்புகள் குறித்தும் எதிர்காலத்தில் சிறந்த தொழில் முனைவோராக எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் சிறப்பாக எடுத்துரைத்தார்.பின்னர் மாலயில் நடைபெற்ற கருத்தரங்கின் நிறைவு பகுதியில் ராஜலெட்சுமி கல்வி குழுமத்தின் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான பி.ஏ.ஆறுமுக நயினார் மாணவர்களிடம் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு பின்னர் இந்தியக்குடியரசுப் பணிகளில் ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்.,போன்ற உயர்பதவிகளுக்கான தேர்வினை வெற்றிகரமாக எதிர்கொண்டு எதிர்காலத்தில் சிறந்த ஆட்சியாளராகவும் நல்லதொரு சிறந்த குடிமகனாகவும் வருவது குறித்தும் அறிவுரைகளைப் பகிர்ந்தார்.   
மாநில அளவிலான கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பங்கு பெற்றனர்.இந்த கருத்தரங்கில் 100க்கும்மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.சிறப்பான கட்டுரையைச் சமர்ப்பித்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை 2ம் ஆண்டு மாணவர் கணேஷ் சிறப்புப்பரிசை தட்டிச் சென்றார்.  
இந்த கருத்தரங்கிற்கு ராஜலெட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் பின்னி கிறிஸ்டதாஸ் தலைமையில் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் அமிர்தா புஸ்பம் எஸ்தர் ஒருங்கிணைப்பில் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர்கள் பாண்டீஸ்வரி சத்திய குணா மற்றும் வணிகவியல் துறை மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர். 
 மாலையில் நடைபெற்ற விழாவில்  ராஜலெட்சுமி கல்வி குழுமத்தின் தலைவரும் தூத்துக்குடி மாவட்ட அஇஅதிமுக முன்னாள் மாவட்ட கழக செயலாளருமான பி.ஏ.ஆறுமுக நயினார்  மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் டாக்டர் சுகன்யா சம்பத்,மற்றும் டாக்டர் ஜெயலலிதா கருப்பசாமி,ஆகியோர் பங்கேற்று கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவ,மாணவியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.  தூத்துக்குடி ராஜலெட்சுமி கல்வியியல் கல்லூரி முதல்வர்  பேராசிரியர் ஜான்சன் வீராசிங் ,முனைவர் சண்முக நாராயணன் ,அறிஞர் அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விஜயலெட்சுமி கல்வி குழுமங்களின் ராஜலெட்சுமி கல்வி குழுமங்களின் அணைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo