Onetamil News Logo

வருகிற 03ம் தேதி சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் சிறுசிறு அளவில் தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது 

Onetamil News
 

வருகிற 03ம் தேதி சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் சிறுசிறு அளவில் தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது 


தூத்துக்குடி 2020 செப் 28 ;வருகிற 03.10.2020 அன்று தமிழக மாநிலம் முழுவதும் சிறுசிறு அளவில் (State wide micro level regular Lok Adalat) தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது                                                                                                      
        தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது....மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் வருகிற 03ம் தேதி அன்று மாநிலம் முழுவதும் சிறு சிறு அளவில் (State wide micro level regular Lok Adalat) தொடர்ச்சியாக மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீர்வு மைய கட்டிடத்தில் வைத்து தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர்,  N.லோகேஷ்வரன்  தலைமையில் வருகின்ற 03ம் தேதி அன்று காலை 11.00மணி அளவில் மேற்படி மக்கள் நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேற்படி மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து வகையான சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளும், காசோலை மோசடி வழக்குகளும், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகளும், சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகளும் தீர்வு காணப்பட உள்ளது. எனவே மேற்படி மக்கள் நீதிமன்றத்தை பொதுமக்கள், வழக்குதார்கள், வழக்கறிஞர்கள், வங்கித்துறையினர், காப்பீடு நிறுவனத்தினர், காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசு துறையினர் கலந்து கொண்டு வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கண்டு பயனடையுமாறு கூறியுள்ளார்.               
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo