Onetamil News Logo

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

Onetamil News
 

புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 


சென்னை செப் 09, 2021 : புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசும் போது, சட்டசபை கூட்டத்தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கலைவாணர் அரங்கில், சில காரணங்களால் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், தற்போது அது குறித்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோடநாடு விவகாரம்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி
பின்னர் பழனிசாமி பேசும்போது, அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து போன்றவை நடக்கவில்லை எனக்கூறினார்.
அமைச்சர் துரைமுருகன்: அதிமுக ஆட்சியின் போது தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தது. பிறந்த நாள் விழாவின் போது ரவுடிகள் அரிவாளால் கேக் வெட்டியது அதிமுக ஆட்சி காலத்தில் தான்.
ஸ்டாலின்: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது முதல்வராக இருந்த பழனிசாமி என்ன செய்தார். சம்பவம் நடந்த இடம் சாதாரண இடமில்லை. அதனை எந்த குற்றத்தில் சேர்ப்பது? ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, கோடநாட்டில் தங்கியிருந்து அலுவல் மேற்கொண்டார். ஜெயலலிதா அலுவல் மேற்கொண்ட இடத்தில் சிசிடிவி கேமரா ஏன் அகற்றப்பட்டது? 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தும் பழனிசாமி அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? கொலை, கொள்ளை சம்பவத்தின் போது ஏன் சிசிடிவி கேமராக்கள் ஏன் செயல்படவில்லை?. கோடநாடு மேல் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது யார்? உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?
பழனிசாமி : ஜெயலலிதா மறைவுக்கு பின் சொத்து வேறு ஒருவருக்கு சென்றுவிட்டது. தனியார் சொத்துக்கு நாங்கள் எப்படி பாதுகாப்பு தர முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo