Onetamil News Logo

தேசிய விளையாட்டில் சிலம்பம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்,  12 வயதிலேயே பல உலக சாதனைகள், தேசிய, சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்த திருச்சி மோ.பி.சுகித்தாவுக்கு வாழ்த்து

Onetamil News
 

தேசிய விளையாட்டில் சிலம்பம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்,விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல்,12 வயதிலேயே பல உலக சாதனைகள், தேசிய, சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்த திருச்சி மோ.பி.சுகித்தாவுக்கு வாழ்த்து 


திருச்சி 2021 ஜூலை 11:சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருவள்ளூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.
புதுக்கோட்டையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களிடம் திருச்சி மாவட்ட சிலம்பம் சங்க செயலாளர் மாஸ்டர் கலைச்சுடர்மணி எம்.ஜெயக்குமார், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் தலைவர் மற்றும் இந்திய சிலம்ப கோர்வை தலைவர் இரா.மோகன், சிலம்பத்தில் பல உலக சாதனைகள் மற்றும் சர்வதேச சிலம்ப விளையாட்டு வீராங்கனை மோ.பி.சுகித்தா, பயிற்சியாளர் எம்.சிவராமன் ஆகியோர் நேரில் சந்தித்து திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்க இருப்பது எங்களை போன்று விளையாட்டில் சாதிக்க இருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும்,மேலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தையும் தேசிய அளவிலான விளையாட்டுகளில் கொண்டு வந்தால் எங்களை போன்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை கேட்ட அமைச்சர் நிச்சயமாக உங்கள் கோரிக்கையை பரிசீலித்து தேசிய விளையாட்டில் சிலம்பம் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் சிலம்பத்தில் 12 வயதிலேயே பல உலக சாதனைகள், தேசிய, சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்த திருச்சி மோ.பி.சுகித்தாவை வாழ்த்தி பாராட்டினார்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo