Onetamil News Logo

தெய்வச்செயல்புரம் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், மண்டபம் கட்டுவதற்கு ஸ்டெர்லைட் காப்பர் ஆலை ரூபாய்  7 லட்சம் நிதியுதவி

Onetamil News
 

தெய்வச்செயல்புரம் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், மண்டபம் கட்டுவதற்கு ஸ்டெர்லைட் காப்பர் ஆலை ரூபாய்  7 லட்சம் நிதியுதவி


தூத்துக்குடி, ஜூலை 12,ஞாயிற்றுக்கிழமை  2020:  கோவில்கள் எல்லா இடங்களிலும் உள்ள பக்தர்களுக்கு, மகத்தான ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. தற்போதைய கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் அவை லட்சக்கணக்கானோருக்கு ஆறுதல் அளிக்கின்றன.  அவர்கள் நிம்மதியாக வழிபாடு செய்யத் தேவையான வசதிகள் வழங்கப்படுவது அவசியம்.
பக்தர்கள் கோவிலுக்கு வருவதை மிகவும் செளகரியமான அனுபவமாக மாற்றும் நோக்கில், தூத்துக்குடி நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, தெய்வச்செயல்புரத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், துளைகள் உடைய பேவர் பிளாக் தரையுடன் கொண்ட கோவில் முன்வளாகம் கட்டுவதற்கு ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிதியுதவி அளித்துள்ளது. இந்தப் புதிய தளம், பக்தர்கள் நின்றபடியே பிரார்த்தனை செய்ய எளிதாக இருக்கும்.
கோவில் அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் தொடங்கப்பட்டு, 7 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், கோவிலுக்கு வழக்கமாக வருகை தரும் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பல்வேறு சமூகத்தினரின் சமூக-பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதற்காக, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை தொடர்ந்து ஆற்றி வரும் உதவிகளில் ஒன்றாகத்தான் இந்த உதவியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தூத்துக்குடி  மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 கோவில்களின் மாதாந்திர பூஜைகள் மற்றும் பிற பராமரிப்பு நடவடிக்கைகளுக்கான  தேவைகளுக்குத் தொடர்ந்து உதவி  வருகிறது. கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த இந்தக் கோவில்கள் கடந்த வாரம் மீண்டும் திறக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஒரு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்ற வழிபாடு செய்யப்பட்டதோடு,  ஸ்டெர்லைட் ஆலைக்கு நன்றி தெரிவித்தும், அந்த ஆலை மீண்டும் விரைவாக திறக்கப்பட்டு இயங்கத் தொடங்க வேண்டும் என்ற பிரார்த்தனையும் பக்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக  மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில், சுற்றுப்புற  கிராம பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றனர். இவர்களில் பலர், ஆலை மூடப்பட்டதால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். ஏனெனில் இந்த மாவட்டத்தில் கணிசமான மக்களுக்கான வாழ்வாதாரமாக இது திகழ்ந்ததால், ஆலை மூடப்பட்டது அவர்களுக்கு வாழ்வாதார இழப்பை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட கூடுதல் பாதிப்பிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் கிராம மக்கள், தங்களது இந்த பிரார்த்தனைகள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்.
அனைத்து முக்கிய மத சமூகங்களின் ஆதரவைக் கோரும் விதமாக, தூத்துக்குடியில் உள்ள பல்வேறு வழிபாட்டு தளங்களில், 2 கோடி ரூபாய்க்கும் அதிமான செலவில் கட்டுமான மற்றும் பராமரிப்பு திட்டங்களுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது. சுற்றுச் சுவர்கள் கட்டுவது, வழிபாட்டுக் கோபுரங்கள் மற்றும் சூரிய சக்தி தகடுகள் அமைப்பது மற்றும் நீர் தொட்டிகள்  போன்ற பல  குறிப்பிடத்தக்க பயன்தரத்தக்க திட்டங்கள் இதில் அடங்கும்.
வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தைப் பற்றி ;
வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வேதாந்தாலிமிடெட், இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு, துத்தநாகம், ஈயம், வெள்ளி, தாமிரம், இரும்புத் தாது, எஃகு மற்றும் அலுமினியம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் கொண்ட உலகின் முன்னணி எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் உலோக நிறுவனங்களில் ஒன்றாகும். இருபது ஆண்டுகளாக, வேதாந்தா நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது. தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்1 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. 2019 ஆம் நிதியாண்டில்  42,560 கோடி ரூபாய் அளவிலான பங்களிப்புடன்,  அரசாங்க கருவூலத்திற்கான தலை சிறந்த தனியார் துறை பங்களிப்பாளராக திகழ்கிறது.
 வேதாந்தா நிறுவன செயல் திட்டத்தின் முக்கிய அம்சமாக சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில்  தீவிர கவனம் செலுத்துவதுடன் கூடிய, நிர்வாக முறையும் நிலையான வளர்ச்சியும் உள்ளன. இந்நிறுவனத்திற்கு உலோகம் மற்றும் சுரங்கத் துறையில் சிஐஐ-ஐடிசி -யின் நிலைத்தன்மைக்கான விருது, ஃபிக்கி சிஎஸ்ஆர் விருது, டன் & பிராட்ஸ்ட்ரீட் விருதுகள்  வழங்கப்பட்டுள்ளன. மேலும் பணிபுரிவதற்கு சிறந்த இடம் என்ற சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையில் வேதாந்தா லிமிடெட்  நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன்  நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஏடிஆர்-க்களையும் கொண்டுள்ளது.
 மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள தயவு செய்து www.vedantalimited.com என்ற தளத்தைப் பார்க்கவும்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo