Onetamil News Logo

ஓடை மணல் திருடியவர் கைது - 5 யூனிட் ஓடை மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் 

Onetamil News
 

ஓடை மணல் திருடியவர் கைது - 5 யூனிட் ஓடை மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் 


தூத்துக்குடி 2022 மே 14 ;தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி ஓடை மணல் திருடியவர் கைது - 5 யூனிட் ஓடைமணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல்.
ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் நேற்று (13.05.2022) ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நட்டாத்தி ஓடையில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மணக்காடு பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் செல்லத்துரை (31) என்பவர் உரிய அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா சாயர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து எதிரி செல்லத்துரையை கைது செய்து, அவரிடமிருந்து 5 யூனிட் ஓடை மணல் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 18 AS 2733 (Torus Lorry) என்ற லாரியையும்  பறிமுதல் செய்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo