மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி
மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி
திருச்செந்தூர் 2022 ஆகஸ்ட் 1 ;மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி. சாத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனைப்படுத்தினார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று சிலம்ப சண்டை பிரிவில் முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த சிலம்ப மாஸ்டர் டென்னிசனையும் திருச்செந்தூர் பள்ளித் துணை ஆய்வாளர் ஆனந்தகுமார் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் இந்து துவக்கப்பள்ளி தாளாளர் ராஜமாந்தாங்கன், சின்னத்துரை மற்றும் ராஜேஷ் அவர்கள் கலந்து கொண்டனர்.