Onetamil News Logo

சுபாசினி மள்ளத்தி தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு பேச்சு 

Onetamil News
 

சுபாசினி மள்ளத்தி தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு பேச்சு 


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 15 ;தூத்துக்குடி 2019 ஏப்ரல் 14 ;தூத்துக்குடியில் சுயேச்சை வேட்பாளர் இரா.ச.சுபாசினி மள்ளத்தி தீப்பெட்டி சின்னத்தில் ஒட்டு கேட்டு பொதுக்கூட்டம் நடந்தது.
                                                                                                                                            தூத்துக்குடி மக்களவை பொது தொகுதியில் போட்டியிடும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சமூக ஆர்வலர் இரா.ச.சுபாஷினி மள்ளத்தி அவர்களின் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் (14-04-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு மிக, மிகப் பிரமாண்டமாக, மைதானம் தேவேந்திரர்களால் நிறைந்து காணப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.                                                நூற்றுக் கணக்கான இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள்  புடைசூழ வேட்பாளர் பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து வரப்பட்டார். விளாத்திகுளம் சமூக ஆர்வலர் ரெகுராமபுரம் முருகன் மள்ளர் வரவேற்புரை வழங்க, திருமலைக் குடும்பர் பொதுக்கூட்டத்தை தொகுத்து வழங்க, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிங்காரவேல் தலைமையேற்று நடத்த,  நெல்லை சமூக ஆர்வலர் விஜயகுமார், சமூக ஆர்வலர்கள் சாக்குப்பாண்டியன்,மோசஸ் தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பின் (DYWA) கார்த்தீஸ் பாண்டியன், விவசாயிகள் சங்க நிர்வாகி அருமைராஜ், தஞ்சை மண்டலத்தின் பொறுப்பாளர் சரத் பணிக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளரும் தமிழர் மீட்புக் களத்தின் ஒருங்கிணைப்பாளருமான கரிகாலன், மீனவர் உரிமைக் கூட்டமைப்பு தீரன் திருமுருகன், மண்ணின் மைந்தர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரா. மாமள்ளன் த.கனகமுத்து, மள்ளர் மீட்புக் களத்தின் செந்தில் மள்ளர், கோவை மள்ளர் தாயம் தலைவர் செட்டி. அசோக் பண்ணாடி, குர்மி சபா சேர வர்மன்*, சமூக ஆர்வலர் பிள்ளையார்சாமி, தமிழர்நாடு தேவேந்திரர் இளைஞர் பேரவை அழகர்சாமி பாண்டியன்,  நெல்லை எழுத்தாளர் மருதம் தமிழ்மாறன், கோவை முருகுசேனை வழக்கறிஞர் சிவசாமி தமிழன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற, இறுதியாக அலங்காரத்தட்டு வீரமங்கை, நாடாளுமன்ற வேட்பாளர்  இரா.ச.சுபாசினி மள்ளத்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது..... தூத்துக்குடி மண்ணின் பிரதான தொழில்களாக விளங்கும், நலிந்து வரும் தொழில்களான உப்பு காய்ச்சுதல், மீன் பிடித்தல், தீப்பெட்டித் தொழில் மற்றும் பனைத்தொழில் ஆகியவற்றை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவதற்கு தெளிவான கொள்கை திட்டங்களை வகுத்து, மீண்டும் மேற்கண்ட தொழில்கள், பழைய புத்துணர்ச்சியை பெறுவதற்கு களத்தில் நிற்பேன்.
-தூத்துக்குடி நகரத்தை சுற்றி பரவிவரும் புதிய தொழிற்சாலைகளை, மாவட்டம் முழுவதும் பரவலாக்கி, மாவட்டத்தில் பெரிய நகரங்களாக விளங்கும் கயத்தார் உடன்குடி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் சாத்தான்குளம் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு தூண்டுகோலாக இருப்பேன்.
ஆமை வேகத்தில் நடந்து வரும் உடன்குடி மின் திட்டப் பணிகளை விரைவு படுத்துவேன்.-தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் அத்தனை தொழிற்சாலைகளுக்கும் தாமிரபரணி ஆற்று நீரை எடுப்பதை தடுத்து நிறுத்துவதோடு,,, கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்க உறுதியாக நிற்பேன்.
-தொழிலாளர்கள் நிறைந்த தூத்துக்குடியில், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை,, சர்வதேச தரத்திற்கு கட்டுவதற்கும், உயர்த்துவதற்கும், உந்துதலாக இருப்பேன்.
-தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசனம் பெற்று வந்த 46 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு, சீவலப்பேரி, புளியம்பட்டி, கொம்பாடி, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குச்சாலை, குளத்தூர், தருவைகுளம் வரை புதிய கால்வாய்களை வெட்டி, பழைய தூர்ந்துகிடக்கும் குளம், குட்டைகளை இணைத்து, பாசனப் பரப்பை உயர்த்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.
-விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், வைப்பாற்றில் மணல் அள்ளுவதற்கு நிரந்தர தடையாணை பெறுவேன்.
-திருச்செந்தூர் தாலுகாவின் சுற்றுச்சூழலுக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கும்,  தாரங்கதாரா ஆலையை, இழுத்து மூடுவதற்கு சட்டப் போராட்டத்தை மேற்கொள்வேன்.-தூத்துக்குடி நகரிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தொழிற்சாலைகளில், 10 சதவீதமாக இருக்கும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை, 60 சதவீதமாக உயர்த்த பாடுபடுவேன்.-எந்த தொழிற்சாலையிலும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்வேன். அதற்காக சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முதலாளிகளை, நானே நேரடியாக தொடர்பு கொண்டு, உள்ளூர் தொழிலாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
-மத்திய அரசால் முடக்கப்பட்டு கிடைக்கும் 23 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டிலான, வெளி துறைமுக விரிவாக்கத் திட்டம், சரக்கு தளங்கள் மூன்று மற்றும் நான்கு உள்ளிட்ட விரிவாக்கத் திட்டங்களை, உடனடியாக தொடர்வதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.-ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று, தூத்துக்குடி நகரத்தில் நிலவும், மாசு குறித்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை பெற்று, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பாடுபடுவேன்.
 நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் பம்பை அச்சன்கோவில் ஆறுகளை வைப்பாறோடு இணைப்பது குறித்தான, செயல்திட்டத்திற்கு ஊக்கம் கொடுத்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கேரள அரசின் கதவுகளை தட்டி, திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போராடுவேன்.-தூத்துக்குடி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.                                                                                                                                                                                                                                                                                        நான் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றால். சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத நகரமாக உருவாக்க பாடுபடுவேன்.
-தூத்துக்குடி மண்ணின் பிரதான தொழில்களாக விளங்கும், நலிந்து வரும் தொழில்களான உப்பு காய்ச்சுதல், மீன் பிடித்தல், தீப்பெட்டித் தொழில் மற்றும் பனைத்தொழில் ஆகியவற்றை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவதற்கு தெளிவான கொள்கை திட்டங்களை வகுத்து, மீண்டும் மேற்கண்ட தொழில்கள், பழைய புத்துணர்ச்சியை பெறுவதற்கு களத்தில் நிற்பேன்.தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு இயந்திர தீப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்பை போக்கி,தீப்பெட்டி தொழிலுக்கான கச்சாப் பொருட்களை அவர்களுக்கு தாராளமாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வேன்.
-உப்பு தொழிலுக்கு மின் கட்டண சலுகையை பெற்றுத் தருவேன்.
-மீன்பிடி தொழிலாளர்களுக்கு இன்னும் கூடுதலாக டீசல் மானியத்திற்கு ஏற்பாடு செய்வதோடு, மீன்பிடி தடைக்காலத்தில் அவர்களுக்கான உதவித்தொகையை இரட்டிப்பாக்குவதற்கு, போராடுவேன்.
-நசிந்து வரும் பனை தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதற்கு, தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வேன்.
-தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் உள்ள அத்தனை வாய்க்கால்களையும், குளங்களையும் தூர்வாருவதோடு, நீர்நிலைகளினுடைய இயல்புத் தன்மையை மாற்றியிருக்கும் வேலிக்கருவைகளை, முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு நானே முதல் ஆளாக களத்தில் நிற்பேன்.
-தூத்துக்குடி நகரத்தை சுற்றி பரவிவரும் புதிய தொழிற்சாலைகளை, மாவட்டம் முழுவதும் பரவலாக்கி, மாவட்டத்தில் பெரிய நகரங்களாக விளங்கும் கயத்தார் உடன்குடி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் சாத்தான்குளம் திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு தூண்டுகோலாக இருப்பேன்.
-ஆமை வேகத்தில் நடந்து வரும் உடன்குடி மின் திட்டப் பணிகளை விரைவு படுத்துவேன்.
-தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் அத்தனை தொழிற்சாலைகளுக்கும் தாமிரபரணி ஆற்று நீரை எடுப்பதை தடுத்து நிறுத்துவதோடு,,, கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்க உறுதியாக நிற்பேன்.
-தொழிலாளர்கள் நிறைந்த தூத்துக்குடியில், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையை,, சர்வதேச தரத்திற்கு கட்டுவதற்கும், உயர்த்துவதற்கும், உந்துதலாக இருப்பேன்.
-தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசனம் பெற்று வந்த 46 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு, சீவலப்பேரி, புளியம்பட்டி,
கொம்பாடி,ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், குறுக்குச்சாலை, குளத்தூர், தருவைகுளம் வரை புதிய கால்வாய்களை வெட்டி, பழைய தூர்ந்துகிடக்கும் குளம், குட்டைகளை இணைத்து, பாசனப் பரப்பை உயர்த்துவேன் என்று உறுதி கூறுகிறேன்.
-விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், வைப்பாற்றில் மணல் அள்ளுவதற்கு நிரந்தர தடையாணை பெறுவேன்.
-திருச்செந்தூர் தாலுகாவின் சுற்றுச்சூழலுக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கும்,  தாரங்கதாரா ஆலையை, இழுத்து மூடுவதற்கு சட்டப் போராட்டத்தை மேற்கொள்வேன்.
-தூத்துக்குடி நகரிலும், நகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள தொழிற்சாலைகளில், 10 சதவீதமாக இருக்கும் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கையை, 60 சதவீதமாக உயர்த்த பாடுபடுவேன்.
-எந்த தொழிற்சாலையிலும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்வேன். அதற்காக சம்பந்தப்பட்ட தொழிற்சாலை முதலாளிகளை, நானே நேரடியாக தொடர்பு கொண்டு, உள்ளூர் தொழிலாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.
-மத்திய அரசால் முடக்கப்பட்டு கிடைக்கும் 23 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டிலான, வெளி துறைமுக விரிவாக்கத் திட்டம், சரக்கு தளங்கள் மூன்று மற்றும் நான்கு உள்ளிட்ட விரிவாக்கத் திட்டங்களை, உடனடியாக தொடர்வதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
-ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று, தூத்துக்குடி நகரத்தில் நிலவும், மாசு குறித்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை பெற்று, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பாடுபடுவேன்.
-நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கும் பம்பை அச்சன்கோவில் ஆறுகளை வைப்பாறோடு இணைப்பது குறித்தான, செயல்திட்டத்திற்கு ஊக்கம் கொடுத்து, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக கேரள அரசின் கதவுகளை தட்டி, திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போராடுவேன்.
-தூத்துக்குடி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
ஆறுமுகநேரி ஏரல் ஆத்தூர் போன்ற பகுதிகளில் அபரிமிதமாக விளையும் வாழைத்தார்களை, பதப்படுத்துவதற்கு மூன்று குடோன்களும்,அதனை விவசாயிகளே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு, உரிய அனுமதியை மத்திய அரசிடம் பெற்றுக் கொடுப்பேன்.
-குடிமராமத்து பணிகளுக்காக அரசு ஒதுக்கிய நிதி அனைத்தையும், முறையாக செலவு செய்து, தூர்வாரப்படாத குளங்களும், வாய்க்கால்களும் இல்லை என்கிற நிலையை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் உருவாக்குவேன்.
-மணிமுத்தாறு அணையிலிருந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெறவேண்டிய ஒப்பந்தப்படியான, அணை நீரை முழுமையாக பெறுவதற்கு, நூறு விழுக்காடு முயற்சி எடுப்பேன்.
-விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மானிய திட்டங்கள் அனைத்தையும் குறித்த, விழிப்புணர்வு பிரச்சாரங்களை, நானே முன்னின்று நடத்துவேன்.
-ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும்,, அனைத்து பொதுத்துறை வங்கிகளின் வேளாளர்களையும் அழைத்து,, தாலுகா தோறும் முகாம் நடத்தி, ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கு பாடுபடுவேன்.
தூத்துக்குடி நகரின் தட்பவெப்ப நிலைக்கு அரணாக இருக்கும், பவளப்பாறைகளை காப்பதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, முயற்சி எடுப்பேன்.
-மண்ணை மலடாக்கிய ரசாயன உரங்களில் இருந்தும், பூச்சிக்கொல்லிகளிருந்தும், விளைநிலங்களை பாதுகாத்து, இயற்கை விவசாயத்தின் பக்கம் விவசாயிகளை திருப்புவதற்கு, கிராமம் தோறும் விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொள்வேன்.
-தமிழ் மாணவ மாணவிகளின் மீது வலியத் திணிக்கப்பட்ட, நீட்தேர்வு காக ஒவ்வொரு தாலுகா தலைநகரங்களிலும், தேர்ச்சி மிக்க ஆசிரியர்களை கொண்டு, நீட் பயிற்சி மையங்களை, என்னுடைய சொந்த செலவில், நானே அமைத்து, திறம்பட வழி நடத்துவேன்.-திருச்செந்தூர் நகரத்தை, இன்னும் மேம்படுத்துவதோடு, மது அறவே இல்லா நகராக மாற்றுவேன்.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும், ஆன்மீக நகரங்களை சுத்தப்படுத்துவதற்காக, தன்னார்வலர் சுற்றுச்சூழல் குழு ஒன்றை அமைப்பேன்.அந்தக் குழு வாரத்தின் இறுதி நாளன்று, மாலை நேரங்களில், தன்னுடைய பணியைத் திறம்படச் செய்வதற்கு, முறையாக அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதோடு, வழிநடத்துவதற்கும் முனைப்பாய் இருக்கிறேன்.
-அதிசயம் புதைந்து கிடக்கும், தமிழர் நாகரிகத்தின் தொன்மை நகரான ஆதிச்சநல்லூரை, இன்னும் அகழ்வாய்வுக்கு உட்படுத்த மத்திய தொல்லியல் துறையை வலியுறுத்துவேன்.
-தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும், ஒவ்வொரு தாலுகா தலைநகரிலும், சட்ட வல்லுனர்களை கொண்டு, மாதம்தோறும் இலவச சட்ட உதவி முகாம் களை நடத்துவேன்.
-நீட் தேர்வில் வெற்றி பெற்றும், தன்னுடைய மருத்துவப் படிப்பை தொடர இயலாத நிலையில் உள்ள ஏழை மாணவ மாணவிகளுக்கான, முழு மருத்துவ கட்டணத்தையும் நானே ஏற்று, அவர்களுக்கான மருத்துவ கல்வியை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன்.
-உலக அளவில் அதிக மாலுமிகளைக் கொண்ட நகரமாக விளங்கும் புன்னக்காயலை மையப்படுத்தி, மாலுமிகள் பயிற்சி மையம் ஒன்றை ஏற்படுத்துவேன்.ஆடு மாடுகளின் தேவையை கருத்தில் கொண்டு, கிராமங்கள் தோறும் 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, தண்ணீர் தொட்டியை கட்டுவதற்கு ஏற்பாடு செய்வேன்.
தூத்துக்குடி நகரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் முத்துக் குளித்தலும், சங்கு எடுத்தலும், பட்டுப் போகாமல் பாதுகாக்க, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு, ஒரு நிரந்தர வைப்பு நிதியை ஏற்படுத்துவேன்.
                                                                                                                                                    நான் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டால்,,, என்னுடைய நாடாளுமன்ற தொகுதி, வேலிக்கருவை இல்லா முதல் நாடாளுமன்ற தொகுதியாக அறிவிப்பதற்கு பாடுபடுவேன்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களிலும், என்னுடைய பயணம், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களை நோக்கியே இருக்கும் என்பதை, உளப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
-ஜாதி மோதல் அற்ற தொகுதியாக தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்குவேன்.
                                                                                                                                                  -தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, 6 சட்டமன்ற தொகுதியிலும், என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை வாரத்தின் அனைத்து நாட்களும் திறந்து வைப்பது என்பது எனது கொள்கை முடிவு.
-தூத்துக்குடியில் மாணவிகள் தங்கியிருந்து போட்டித்தேர்வுகளுக்கு தயாராவதற்காக, பயிற்சி மையம் மற்றும் விடுதியை என்னுடைய சொந்தச் செலவில் ஏற்படுத்தி, வளமான எதிர்காலத்தை மாணவ சமூகத்திற்கு உண்டாக்குவதற்கு முழுமூச்சாய் உழைப்பேன்.-வாய்க்கால்களிலும், ஓடைகளிலும், கண்மாய்களிலும் தங்களுடைய கழிவுநீரை கலக்கும், தொழிற்சாலைகளை கண்டறிந்து, அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு மக்களின் பேராதரவுடன் சம்பந்தப்பட்ட ஆலையை, பூட்டி சீல் வைக்கவும் அரசிடம் போராடுவேன்.
                                                                                                                                                  -இறுதியாக இந்த மண்ணுக்கே பெருங்கேடு விளைவித்த தாமிர உருக்கு ஆலையான ஸ்டெர்லைட்டை இழுத்து மூடுவதற்கும், விரட்டி அடிப்பதற்கும், அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு நானே காரணமாக இருப்பேன்.
இதுவன்றி... இன்னும் நூற்றுக்கணக்கான திட்டங்களை கனவுகளாக சுமந்து, உங்கள் முன் நிற்கிறேன்.இது நான் பிறந்த மண். நான் வாழ்கின்ற மண். நான் மட்டுமல்லாது,,, என் பிள்ளைகளும் இந்த மண்ணில் உங்களோடுதான் சக மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்களின் வாழ்வும் வளமும் நலமும் இந்த மண்ணில் உங்களோடுதான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆயிரம் ஆண்டுகள், தமிழ் பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும், பெருமை காத்து நிற்கும் நம்முடைய முத்துநகர்,, அழியாப் புகழ்பெற்ற நகராக, அறம் வளர்த்த நகராக மாறவேண்டுமானால், உங்கள் மண்ணைச் சேர்ந்த என்னையே தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு  அவர் பேசினார்.                                                                                                                              
 இரா.ச.சுபாசினி மள்ளத்தி எழுச்சியுரை ஆற்றி பொதுக்கூட்டத்தை நிறைவு செய்தார். சிறப்புரை மற்றும் எழுச்சியுரை அனைத்திலும் தேவேந்திரர்கள் சமூகமாக கட்டமைக்கப்பட வேண்டியதன் அவசியம், அரசியல் அதிகாரம் பெற வேண்டியதன் அவசியம் மற்றும் தமிழ் சாதிகளின் ஒற்றுமையே பிரதானமாக இருந்தது. தேவேந்திரன் வாக்கு தேவேந்திரனுக்கே என அனைவராலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் 2000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் தமிழகத்தின் பிற பகுதிகளைச் சார்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo