Onetamil News Logo

தூத்துக்குடி கலெக்டர்  உத்தரவை மீறி பசுவந்தனையில்  சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை அமோகம்

 
Onetamil News
Onetamil News
 
 

தூத்துக்குடி கலெக்டர்  உத்தரவை மீறி பசுவந்தனையில்  சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை அமோகம்


ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் சுகாதார மற்ற முறையில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் ரவிக்குமாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கலெக்டர்  இக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் பொது மக்கள் நலன் காத்திட வேண்டும் என கடந்த வாரம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர்  உத்தரவிட்டர் .இதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து சுகாதாரமற்ற முறையில் மீன் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடையை சீல் வைத்ததால் கடை முன்பு மட்டுமல்லாமல் பண்டிகை நாளான இன்று சாலை ஓரங்களில் நான்கு ஐந்து இடங்களில் சாலை ஓர தெருக்களில் போக்குவரத்திற்கு இடையூராக சுகாதாரமற்ற முறையில் அமோகமாக இறைச்சி விற்பனை நடைபெற்றது. இதைப் பார்த்த பொதுமக்கள்  கலெக்டர்- யின்  உத்தரவு கண் துடைப்பு நாடகமே என பேசுவதோடு மட்டுமல்லாமல் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி பசுவந்தனை பஜாரில் இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 5கோயில்கள் உள்ளதால் இக்கோயில்களில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே இறைச்சி மீன் கடைகளை நடத்த ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo