Onetamil News Logo

தூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் ; தினந்தோறும் 60 பேருந்துகள் மட்டும்  இயக்கப்படுவதாக குற்றசாட்டு 

Onetamil News
 

தூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் ; தினந்தோறும் 60 பேருந்துகள் மட்டும்  இயக்கப்படுவதாக குற்றசாட்டு 


 தூத்துக்குடி மார்ச் 10 ; தூத்துக்குடி நகர பணிமனை டிப்போவில் 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.                                
                                                 
தூத்துக்குடி நகர பணிமனை கட்டுப்பாட்டு பிரிவில் ஓட்டுநர்கள்  161 ,கண்டக்டர்கள் 184 மொத்தம் 345 பணியாளர்கள் பணி  செய்து வருகின்றனர்.                                            
                                                 
தூத்துக்குடி நகர பணிமனையில் தினந்தோறும் 60 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 60 ஓட்டுனர்கள்,60 கண்டக்டர்கள் பணியை செய்து வருகின்றனர்.ஆனால் 40 முதல் 60 வரையிலான பணியாளர்கள் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளனர்.                                                                                                       
 தூத்துக்குடி நகர பணிமனை கட்டுபாட்டுப் பிரிவில் போதிய பேருந்துகள் இயக்காததால், தினசரி 5 முதல் 10 பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.இது குறித்து நிர்வாக இயக்குனருக்கு  புகார்கள் சென்றது அவர் திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் குமார் க்கு புகார்களை  அனுப்பி உள்ளார். மேலும் பல்வேறு புகார்கள் சென்றதால் அவரது உத்தரவின் பெயரில் தூத்துக்குடி நகர பணிமனையில்   ஆய்வு செய்யப்பட்டது, அப்பொழுது இந்த முறைகேட்டில் அரசுக்கு வருவாய் இழப்பு செய்ததாக நகர பணிமனை பயணசீட்டு ஆய்வாளர் ஜெகதீஸ்,கட்டுப்பாடு பிரிவு மாற்றுப்பணி ஓட்டுநர் தனபால் ஆகிய இருவரையும் தற்காலிக  வேலை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு பொது மேலாளர் குமாரின் பெயரில் ஒழுங்கு நடவடிக்கை குழு  நடவடிக்கையை எடுத்துள்ளது.                         
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo