Onetamil News Logo

அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பாபநாசம்,  நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவு 

Onetamil News
 

அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பாபநாசம்,  நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவு 


சென்னை 2020 அக்டோபர் 29 ;அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பாபநாசம்,  நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று  வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு ;
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 1.11.2020 முதல் 31.3.2021 முடிய 151 நாட்களுக்கு 417.74 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo