Onetamil News Logo

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவு 

Onetamil News
 

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவு 


சென்னை 2020 அக்டோபர் 29 ;பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
                தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று  வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு ;
தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள்  மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய்,  மருதூர் கீழக்கால் கால்வாய் , தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவைகளின் கீழூள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, 1.11.2020 முதல் 31.3.2021 வரை 151  நாட்களுக்கு   14351.67 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo