தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும், பாஜகவை வீழ்த்துவதற்காக ஜனநாயக சக்திகளைச் சந்தித்து பேச வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தல்
தூத்துக்குடி, 2023 மார்ச்.9 ;தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும், பாஜகவை வீழ்த்துவதற்காக ஜனநாயக சக்திகளைச் சந்தித்து பேச வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியை அமைக்கும் திட்டங்களோடு காய்நகர்த்தி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அதற்காக கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், சனாதன சக்தியை வீழ்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.