கிராம தலையாரி தேர்வு முறையில் பல்வேறு குறைபாடுகள்,தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு தூத்துக்குடி கலெக்டருக்கு தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் மு காந்தி மள்ளர் கோரிக்கை
கிராம தலையாரி தேர்வு முறையில் பல்வேறு குறைபாடுகள் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணியை இன்ஜினியர் பட்டதாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பரிந்துரையின் படி தேர்வு செய்யப்படவில்லை மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு தூத்துக்குடி கலெக்டருக்கு தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் மு காந்தி மள்ளர் அனுப்பி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13-ஆம் தேதி கிராம தலையாரி பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் நடைபெற்று இருக்கின்றன தலையாரி பணியிடத்திற்கு ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக அனைத்து வட்டாட்சியர்கள் அலுவலகத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பதிவு மூப்பு பட்டியல் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் தற்பொழுது தேர்வு செய்யப்பட்டிருக்கும் தலையாரி தேர்வு முறையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்த முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை குறிப்பாக இன்ஜினியரிங் படித்த கல்லூரி படித்த பட்டதாரிகளுக்கு தான் பணி உத்தரவு வழங்கப்பட்டு இருக்கிறது இது மிகவும் வேதனையான நிகழ்வாகும் அரசினுடைய மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பிய பட்டியலை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை தமிழக அரசு உடனடியாக ஒரு குழு அமைத்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட வேண்டும் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் இதுவும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தெரிய வருகிறது குறிப்பாக விளாத்திகுளம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பணியிடம் கூட வழங்கப்படவில்லை இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முதல்வர உத்தரவிட வேண்டும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் இன சுழற்சி முறையே சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை அதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கின்றன. பத்திரிக்கையில் ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு பணியை நிரப்புவதில் இன சுழற்சி முறையை சரியாக நடைமுறைப்படுத்தவில்லை, விளாத்திகுளம் தாலுகாவில் 17 தலையாரி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது இதில் அந்த தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் உறவினர்களுக்கு பணியிடம் வழங்கப்பட்டுள்ளது தேர்வு செய்யப்பட மதிப்பெண் வழங்கப்பட்டதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது மதிப்பெண் வழங்கியவர்கள் தாங்கள் உறவினர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிருக்கிறார்கள். உள்ளூர் கிராமத்தில் குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை, ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை இப்போது தேர்வு செய்யப்பட்ட நடைமுறையில் ஒரு ஊரிலிருந்து 15 km தூரத்தில் உள்ளவர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். உள்ளூரிலேயே சுமார் 100 பேர் மனு கொடுத்தும் அவர்களில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படாமல் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெளிநபர்களை பணி அமைத்திருக்கிறார்கள். மொத்தத்தில் தற்போது தேர்வு முறை அனைத்திலும் பல்வேறு குறைபாடுகளும் இருக்கிறது. எனவே இந்த தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்று பல்வேறு குறைபாடுகளால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் தலையாரி பணி நியமனத்தை ரத்து செய்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் பதிவு அடிப்படையில் பணி வழங்க தமிழ்நாடு மக்கள் கட்சி கோரிக்கை வைக்கிறது இல்லையென்றால் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் இருக்கிறது.