Onetamil News Logo

தமிழ்நாடு காவல்துறை ஏ. டி. ஜி.பி  ஈஸ்வரமூர்த்தி நாளை ஓய்வு பெறுகிறார் 

Onetamil News
 

தமிழ்நாடு காவல்துறை ஏ. டி. ஜி.பி  ஈஸ்வரமூர்த்தி நாளை ஓய்வு பெறுகிறார் 


தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறையில்,பல்வேறு பிரிவில்  நீண்டகாலமாக பணியாற்றியவர் என்று பெருமை பெற்றவர்  ஏ. டி. ஜி.பி  ஈஸ்வரமூர்த்தி நாளை ஓய்வு பெறுகிறார்.                   
                  எத்தனைதான் நடுநிலையோடும் நேர்மையாகவும் பணியாற்றினாலும், அவர்களைத் தங்கள் அதிகாரம் கொண்டு வளைத்து, நெளித்து விடுவார்கள் அரசியல் வாதிகள். இப்படிப்பட்ட சக்திபடைத்த அரசியல் வாதிகளுக்கு மத்தியிலும், நடுநிலைத் தவறாமல் பணி ஆற்றியிருக்கிறார் என்பது தான் மிகவும் சிறப்பு                                                                                            
       தமிழக உளவுத்துறை (உள்நாட்டு பாதுகாப்பு பிரிவில்  ஐஜி )பதவி மிக முக்கியமானது. காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கு அடுத்து முதல்வருடன் நேரடியாகத் தொடர்பில் உள்ள முக்கியமான பதவி இன்டலிஜென்ட் எனப்படும் உளவுத்துறை பதவி. இது தவிர சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு, கியூ பிராஞ்ச் போன்ற துறைகள் மிக முக்கியமானவை.
 காவல்துறை உளவுப்பிரிவின் (உள் பாதுகாப்பு) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த சி ஈஸ்வரமூர்த்தி, பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி தற்போது பணியாற்றி வருகிறார்.
 தமிழக காவல்துறையின் பாதுகாப்பு பிரிவில் நுண்ணறிவுப் பிரிவு முதல் டி.ஐ.ஜி. என்ற பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மதவாத இயக்கங்கள், நக்சல் இயக்கங்கள் பாதுகாப்பு பிரிவு. 
ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் முதன்முதலில் ஈஸ்வரமூர்த்தியை டி ஐ ஜி ஆக நியமித்தார்கள் முதல் குரூப்-1 அதிகாரி ஆவார். 1998-ம் ஆண்டு அவர் ஐபிஎஸ் அதிகாரியாக தகுதி பெற்றார். பணியில் மிக நேர்மையான அதிகாரி ஆவார். அவர் எந்த அரசியல் கட்சிக்கும் வேண்டப்பட்டவராக இதுவரை இருந்தவர் இல்லை என்பது அவரது சிறப்பு, ஈஸ்வரமூர்த்தி நீண்ட காலமாக மாநில புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். 2007 முதல் 2012 வரை மத்திய புலனாய்வுப் பிரிவில் (சிபிஐ) எஸ்பி மற்றும் டிஐஜியாகவும் இருந்தார்.
        அவர் 2012 முதல் 2016 வரை டிஐஜி (உள் பாதுகாப்பு) ஆக இருந்தார், பின்னர் 2016 டிசம்பரில் உள்நாட்டுப் பாதுகாப்பு ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். ஜூன், 2019 இல், மத்திய குற்றப்பிரிவின் ஐஜி/ கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
           கடந்த மே மாதம் அவருக்கு ஐ.ஜி., உள் பாதுகாப்பு பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது.
 ஈஸ்வரமூர்த்தி. சி.பி.ஐ. மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். இயல்பாகவும் இனிமையாகவும் பழகக்கூடியவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. கசப்பாக இருந்தாலும் உண்மையான தகவல்களை மட்டுமே அரசுக்கு தருவதில் உறுதியாக இருப்பவர்!
 கடந்த 22 ஆண்டுகால காவல்துறை பணியில் எந்த சூழலிலும் கான்ட்ராவெர்சியில் சிக்கிக் கொண்டதில்லை இவர்.
 கடந்த 1998- ல் சிபிஐயில் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட இவர், 2000-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அங்கீகாரம் கொடுத்தது மத்திய உள்துறை. 2000 - 2001 ஜூலை வரை எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்பி யாகவும், 2001 ஜூலை முதல் 2003 மே வரை மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக பணிபுரிந்தார் ஈஸ்வரமூர்த்தி.
 இதனைத் தொடர்ந்து, 2003 மே முதல் 2003 அக்டோபர் வரை எஸ்.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக மீண்டும் நியமனம். 2003 அக்டோபர் முதல் 2004 அக்டோபர் வரை 1 வருடம் தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்.பி.யாகவும், 2004 அக்டோபர் முதல் 2005 செப்டம்பர் வரை சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவின் துணை ஆணையராக பணியாற்றினார். மீண்டும் எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்புப் பிரிவு எஸ்.பி.யாக 2005 செப்டம்பர் முதல் 2007 நவம்பர் வரை நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, சி.பி.ஐ.க்கு மீண்டும் இவரை அழைத்துக்கொண்டது மத்திய அரசு. அதன்படி, 2007-நவம்பர் முதல் 2012 ஆகஸ்ட் வரை சி.பி.ஐ. யில் எஸ்.பி. (சென்னை) யாகவும் பணியாற்றிய ஈஸ்வரமூர்த்திக்கு டி.ஐ.ஜி. பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2012 நவம்பர் முதல் 2014 ஜூன் வரை சி.பி.ஐ. யில் டி.ஐ.ஜி.யாக தனது பணியைத் தொடர்ந்தார். அதன் பிறகு 2014-ல் ஈஸ்வரமூர்த்தியை தமிழக அரசு அழைத்துக்கொண்டது. மாநில பணிக்குத் திரும்பிய ஈஸ்வரமூர்த்தி, 2014 ஜூன் முதல் 2016 டிசம்பர் வரை மாநில உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். 2016-ல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, 2016 டிச முதல் 2019 ஜூன் வரை உள்நாட்டு பாதுகாப்பு பிரிவை கவனித்தார். 2019 ஜூன் முதல் 2020 மே வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பொறுப்பேற்ற ஈஸ்வர மூர்த்தி, அடுத்து தமிழக அரசின் உளவுத்துறை ஐ.ஜி.யாக அறிவிக்கப்பட்டார். 
 காவல்துறை உளவுப்பிரிவின் (உள் பாதுகாப்பு) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த சி ஈஸ்வரமூர்த்தி, பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி தற்போது பணியாற்றி வருகிறார் தமிழக காவல்துறையில் இருக்கக்கூடிய உள்நாட்டு பாதுகாப்பு உளவு பிரிவில்  அதிக ஆண்டு இருந்த பெருமை  இவரையே சேரும்,
 தமிழ்நாட்டில் தீவிரவாதம் விடுதலைப் புலிகள் மதவாத இயக்கங்கள் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் நக்சலைட்டுகள்  உடனுக்குடன் சேகரித்து தகவலை முதல்வர்டிஜிபி மற்றும் உளவுத்துறை ஐ ஜி   அனுப்பிக் கொண்டே இருப்பார்.
 மிகவும் அன்பாக எல்லோருடன் பத்திரிக்கையாளர்கள்  தனக்கு கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளும் எல்லோருடன் மிக அன்பாக பழகக்கூடிய ஒரு அதிகாரி, காவல்துறையின் பல்வேறு பதவிகளுக்கு நீயா நானா என்று போட்டி போடுவார்கள்  ஆனால் இவர் தனக்கு கொடுத்த பதவியை மிகச் சிறப்பாக பணியாற்றியதால் அவருக்கு பதவி தேடி வந்தது.
ஐந்து  முதல்வருடன் உளவு பிரிவில் (உள்நாட்டு பாதுகாப்பு ) பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு  கலைஞர் ஜெயலலிதா ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி மு க ஸ்டாலின்                    
ஐஜி சி ஈஸ்வரமூர்த்திக்கு உளவுத்துறை (உள் பாதுகாப்பு) இன்ஸ்பெக்டர் ஜெனரல், குடியரசுத் தலைவர் பதக்கம்
2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது
உளவுத்துறையில் பணியாற்றும்போது பல நேரங்களில், 'கசப்பான உண்மைகளை ஆட்சியாளர்களுக்கு நேரடியாக தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
அவ்வாறான நேரத்தில்கூட எவ்வித தயக்கமும் இல்லாமல் 'ரிப்போர்ட்' செய்துவிடுவார்.
 ஈஸ்வரமூர்த்தி இதுவரை வகித்து வந்த பதவிகள்:
                                                                            
🌹 SBCID, விழுப்புரம் மாவட்டம்15.06.199422.01.1995
🌹 எஸ்பிசிஐடி, தலைமையகம், சென்னை23.01.1995             25.06.1996
🌹 கும்பகோணம் துணை
பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம்
 26.06.1996 /22.11.1996
🌹 எஸ்பிசிஐடி, தலைமையகம், சென்னை29.11.1996           23.10.1998
🌹 எஸ்பிசிஐடி, தலைமையகம், சென்னை29.11.1996   23.10.1998 
🌹ஏடிஎஸ்பி மதுவிலக்கு பிரிவும் மதுரை மாவட்டம் 02.11.1998
20.01.1999
🌹2000 டிசம்பர் - ஜூலை 2001 எஸ்பிசிஐடி -சிறப்புப் பிரிவு எஸ்பி
🌹2001 ஜூலை- 2003 மே - மேற்கு மண்டலம் லஞ்ச ஒழிப்புத்துறை.
🌹2003 மே - அக்டோபர் 2003 - எஸ்பி, எஸ்பிசிஐடி
🌹2003 அக்டோபர் 2004 அக்டோபர்- தமிழ்நாடு கமாண்டோ பிரிவு எஸ்பி
🌹2004 அக்டோபர் - 2005 செப்டம்பர்- நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் சென்னை.
🌹2005 செப்டம்பர் - 2007 நவம்பர்- எஸ்பிசிஐடி சிறப்புப் பிரிவு எஸ்பி.
🌹2007 நவம்பர் - 2012 ஆகஸ்ட் - சிபிஐ -எஸ்பி சென்னை
🌹2012 நவம்பர் - 2014-ஜூன் - டிஐஜி - சிபிஐ சென்னை.
🌹2014 ஜூன் - 2016 டிசம்பர் - உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு டிஐஜி.
🌹2016 டிசம்பர் - 2019 ஜூன் - ஐஜி- உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு.
🌹2019 ஜூன் - 2020 மே - மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர். சென்னை.
🌹2020 மே - உளவுத்துறை ஐஜி/ மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கூடுதல் பொறுப்பு.
🌹2021 உளவுப்பிரிவு ஐ.ஜி. சி.ஈஸ்வரமூர்த்தி உள்நாட்டு பாதுகாப்பு உளவுப்பிரிவு                     
🌹2020  ஐஜி அந்தஸ்து அதிகாரியான ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறை ஐஜியாக கொஞ்ச நாள் அந்தப் பதவியில் இருந்தார்
*2023 காவல்துறை உளவுப்பிரிவின் (உள் பாதுகாப்பு) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த சி ஈஸ்வரமூர்த்தி, பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏடிஜிபி தற்போது பணியாற்றி வருகிறார்                           குரூப்-1 அதிகாரியாக காவல் துறைக்கு வந்த இவர் 31/5/2023-ம்  நாளை ஓய்வு பெறுகிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo