Onetamil News Logo

தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வூசூ கழகம் இணைந்து நடத்தும் 17வது மாபெரும் மாநில அளிவிலான வூசூ போட்டி ;தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

Onetamil News
 

தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வூசூ கழகம் இணைந்து நடத்தும் 17வது மாபெரும் மாநில அளிவிலான வூசூ போட்டி ;தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 21 ; தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வூசூ கழகம் இணைந்து நடத்தும் 17வது மாபெரும் மாநில அளிவிலான வூசூ போட்டி தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
 தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வூசூ கழகம் இணைந்து நடத்தும் 17வது மாபெரும் மாநில அளிவிலான வூசூ போட்டி தூத்துக்குடியில் பானுபிருந்தாவன் வளாக திருமண மண்டபத்தில் நேற்று முதல் நாளை வரை (19.02.2021 முதல் 21.02.2021) ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. 
இப்போட்டியில் சென்னை, கோயம்புத்தூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, திருப்பூர், தர்மபுரி, நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, மதுரை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவாரூர், கரூர், திருவள்ளுர், திருச்சி, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து இன்று (20.02.2021) பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 600 பேர் கலந்து கொண்டனர். 
இதில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வூசூ தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டியின் இந்திய அளவிலான நடுவர் சபீர், தமிழ்நாடு மாநில அளவிலான நடுவர்  தங்கபாண்டியன், தமிழ்நாடு வூசூ கழகத்தின் பொதுச் செயலாளர் ஜான்சன், மாவட்ட விளையாட்டு கழக தலைவர் தமிழ்ச்செல்வன், மாநிலம் மற்றும் மாவட்ட வூசூ கழக உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள், வூசூ போட்டியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் வேல்ராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo