தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் காலமானார்
சென்னை 2021 ஜனவரி 15 ;தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்.
தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர் .இந்த நிலையில் ஞானதேசிகனுக்கு முதல்கட்டமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர் .இந்த நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞானதேசிகன் காலமானார். 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்தவர் ஞானதேசிகன்,மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்தவர்.