Onetamil News Logo

வேட்டி கட்டும் பழக்கத்தை ஒழித்துக் கட்டி வரும் தமிழர்கள்,எல்லோரும் வேட்டி கட்டுங்கள் என்று தமிழன்டா இயக்கத்தலைவர் ஜெகஜீவன் அறிவுறுத்தல் 

Onetamil News
 

வேட்டி கட்டும் பழக்கத்தை ஒழித்துக் கட்டி வரும் தமிழர்கள்,எல்லோரும் வேட்டி கட்டுங்கள் என்று தமிழன்டா இயக்கத்தலைவர் ஜெகஜீவன் அறிவுறுத்தல்       


வேட்டி கட்டும் பழக்கத்தை ஒழித்துக் கட்டி வரும் தமிழர்கள் தமிழர் பாரம்பரியத்தை மேம்படுத்துவோம்,தமிழராக வாழ்வோம்,.தமிழ் கலைகளை விழாக்களுக்கு அழைப்போம் என்று உறுதிமொழி எடுக்கவேண்டும் என்று தமிழன்டா இயக்கத்தலைவர் ஜெகஜீவன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது...                                                                                                                தமிழகத்தில் வேட்டி கட்டும் பழக்கமானது, இன்றைக்கு 80 சதவீதம் குறைந்துவிட்டது. இன்றைக்கு 20% மட்டும்தான் வேட்டி கட்டுகிறார்கள்.  இதில் குறிப்பாக திராவிட கட்சிகளை சார்ந்தவர்கள் வேட்டி கட்டுகிறார்கள். ஏனைய கட்சிகளை சார்ந்தவர்கள் வேட்டி கட்டுவதற்கு தயங்குகிறார்கள்.இளைய தலைமுறை கிராமிய கலைஞர்கள் வேட்டி கட்டுவதை தவிக்கின்றனர்.ஜீன்ஸ் பேண்ட் போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.குர்தா போடுவதில் ஆற்வம்,இப்படி வட இந்திய ஆடைகள் அவர்களது காலசூழ்நிலைக்கு தகுந்தாற்போல அமைத்துள்ளனர். மேற்கத்திய வட இந்திய உடைகளை அணிவதில் ஆர்வம் கொள்கிறார்கள். ஆனால் தங்களை போராளிகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். அந்தப் போராளிகளும் தங்கள் தமிழர் உடைகளை அணிவதில் தயக்கம் காட்டுகின்றனர். மேற்கத்திய வட இந்திய உடைகளை அணிவதன் மூலமாகத் தான் நமக்கு மரியாதை வழங்குகிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.. என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களே தமிழ் பண்பாட்டை அழிக்கிறார்கள் என்கின்ற சிந்தனை மேலோங்குகிறது. இன்றைய புதிய கட்சிகளாக உருவெடுத்து வந்து கொண்டிருக்க கூடிய பல கட்சிகள், பல இயக்கங்கள், பல அமைப்புகள், பல சங்கங்கள் போன்றவை வேட்டி கட்டுவதை தவிர்த்து வருகிறார்கள். வேட்டி கட்டுவதை தவிர்ப்பதனால் தமிழர் பண்பாடு நிலை உலைந்து போய் நிற்கிறது. குறிப்பாக உடை பண்பாடு அழிகிறது. என்று சொன்னால் உணவு பண்பாடு ஏற்கனவே 90 சதவீதம் அழிந்துவிட்டது. அதேபோல தமிழருடைய கலைகளும் 90 சதவீத கலைகள் அழிந்துவிட்டது. கலைகளை அழிப்பதிலும், உணவுகளை மறைப்பதிலும், மேற்கத்திய உணவுகளை உட்கொண்டால் தான் டீசென்ட் என்கின்ற ஆங்கில வார்த்தை இன்றைக்கு நம்மிடைய குடி கொண்டிருக்கிறது. ஆனால் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும், டீசன்ட் என்பது சுத்தம், சுகாதாரம் தான் டீசன்ட்,என்பது இவர்கள் நினைக்கிறார்கள். டீசண்டா இருக்கான் என்று சொல்லக்கூடிய அந்த வார்த்தையானது தமிழருடைய பண்பாடுகளை அழிப்பதற்கான வார்த்தையாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. காரில் சென்றால் ஒரு மரியாதை, கோட்டு போட்டு சென்றால் ஒரு மரியாதை, மேற்கத்திய உணவுகளை உண்டால் ஒரு மரியாதை, செண்டை மேளம் இவை கேரளா பண்பாட்டை கூறக்கூடிய கொட்டு, இவற்றை அடித்தால் தான் நமக்கு ஒரு மரியாதை கிடைக்கும் என்கின்ற சிந்தனையும் இன்றைக்கும் மேலோங்கி வருகிறது. காரணம் காலங்கள் மாற மாற தமிழருடைய அனைத்து பண்பாடும் மாறுகிறது. என்கின்ற வேதனையான ஒரு பதிவு தான் இந்த கட்டுரையாகும். பொதுவாக விழாக்கள் நாளிலாவது வேட்டி கட்ட வேண்டும் என்கின்ற சிந்தனை தமிழர்களுக்கு இருக்க வேண்டும், கேரளா மக்களை பார்த்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும், கேரளா மக்கள் நன்கு படித்தவர்கள் தான், ஆனால் அவர்களுடைய பண்பாட்டை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை பண்பாட்டை அழிக்கவில்லை, பண்பாட்டை மேலோங்க செய்கிறார்கள், அங்கே அரசியல்வாதிகள் முதல் சாதாரண ஜனங்கள் வரை கேரள மலையாள பண்பாட்டை தூக்கி மேலோங்க செய்கிறார்கள். அவர்களைப் பார்த்தாவது தமிழகத்தில் உள்ள தமிழர்கள் சிந்திக்க வேண்டும், நாம் ஏன்? நம்முடைய பண்பாட்டை அளிக்கிறோம்.மலையாள மக்களுக்கு 4 மொழிகள் தெரிகிறது.நமக்கு தமிழ் மொழியைக்கூட சரிவர பேசத் தெரியவில்லை, நாம் ஏன் மாற்று பண்பாட்டு உணவுகளை, உடைகளை பயன்படுத்துகிறோம். என்கின்ற சிந்தனை இருக்க வேண்டும். மேலும் சைனா உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள், அரபு நாட்டு உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள், பாம்பே உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள், டெல்லி உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள், இப்படி மேற்கத்திய, வட இந்திய, கிழக்கிந்திய உணவுகளை எல்லாம் உட்கொண்டால் நோய்கள் வருமா? வராதா? என்கின்ற சிந்தனையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.தமிழர்கள் உணவுகள் தமிழர்கள் காலச் சூழ்நிலையை வைத்துதான் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                              வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை, நெசவுக்கலை. பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தட்ப வெப்ப நிலைகள் உடம்பைத் தாக்காத வண்ணம் ஆடை பாதுகாத்து வந்தது. நமது கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் காட்டி வந்தது. ”ஆடையுடையான் அவைக் கஞ்சான்” ”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்ற முதுமொழிகள் பல தோன்றின. முற்காலத்தில், மக்களின் ஆடை அதை அணியும் முறை ஆகியவற்றைக் கொண்டே அவர்களின் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.             தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். இந்திய அரசாங்கப் புதைபொருள் ஆராய்ச்சித்துறைத் தலைவராய் இருந்த அறிஞர் சர். சான்மார்சல், இந்திய வரலாற்றுத் துறை அறிஞர் இராசு அடிகள் போன்றவர்கள், "சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் பெருங்குடி மக்கள் கிரேக்கர், உரோமர் போன்ற நாகரிக மக்களின் பொற்காலங்களையும் தாண்டியவர்களாய், மொகஞ்சதாரோவில் தலைசிறந்த நகரங்களையும் கட்டடங்களையும் முத்திரைகளையும் ஆயுதங்களையும் அணிகலன்களையும் பாத்திரங்களையும், ஆடைகளையும் செய்து நனி சிறந்த நாகரிகத்தின் உச்சிக்கொம்பை எட்டிப்பிடித்த மக்களாய் வாழ்ந்தனர்" என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின் கைத்தொழில் வணிக அமைச்சரால் நிறுவப்பெற்ற 'அகில இந்திய கைப்பணிக் கழகம்' வெளியிட்ட இந்திய அச்சுப் புடவைகள் என்ற நூலில் ”ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு, நெய்தற்கலை மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச்சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது” என்று திட்டவட்டமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
             ஆடை நெசவுக்கலை 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதைச் சிந்து சமவெளி நாகரிகச் சின்னங்களில் காணப்படும் ஆடைகள் உணர்த்துகின்றன. வனப்பும் மென்மையும் மிகுந்த ஆடைகள் தமிழகத்தில் நெய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்ததுடன், அவை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது.
            பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே 'காருகவினை' எனப்பட்ட நெசவுத் தொழில், நிகண்டுகளில் குறிப்பிடப்படுகிறது. செங்குந்த கைக்கோள முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர் இப்பணியில் ஈடுபட்டனர். சங்க இலக்கியங்களில் ஓரிரு இடங்களில் காணப்படுகிற, ஆளில் பெண்டிர் தாளில் தந்த நுணங்கு நூண் பனுவல் –“ஆதரவற்ற பெண்டிர் தமது சுயமுயற்சியால் நூற்ற நூல்”, ( "பருத்திப் பெண்டின் பனுவல்")  போன்ற குறிப்புகளாலும், தமிழகத்தில் நெசவுக்கலை சிறப்புற்றிருந்தமை புலப்படும்.
   கி .பி . 985-ல் தமிழகத்தில் இராஜராஜ சோழன் காலத்தில் பட்டு நெசவு செழிப்புற்று வளர்ந்தது . தஞ்சைப் பெரியகோவிலின் கோபுரத்தின் உட்புறத்தில் தீட்டப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராஜராஜன் தன் மனைவியருடன் பட்டாடையில், நடராஜரை வழிபடுவதான காட்சி இன்றளவும் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. உறையூரில் முன்காலத்தில் நெசவுத் தொழிலுக்குச் சாயமிடும் தொட்டி காணப்பட்டதாகவும். உறையூரில் நெசவு செய்யப்பட சேலைகள் ஒரு தேங்காய் மூடியில் அடைக்கக் கூடிய அளவுக்கு மெல்லியதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.                   
                            பெரும்பாலான நகரவாழ் தமிழ் ஆண்கள் நீள்சல்லடம் மற்றும் மேற்சட்டை உடுத்தும் வழக்கம் உடையவர்கள். பெண்களும் அவ்வாறு உடுத்தும் வழக்கம் பரவி வந்தாலும், தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் இளம்பெண்கள் சுடிதார், சல்வார்-கமீஸ் அல்லது பஞ்சாபி உடை எனப்படும் வட இந்திய உடை உடுத்துவதே அதிகம் எனலாம். திருமணமான பெண்கள் பொது இடங்களுக்குப் பெரும்பாலும் புடவை அணிவர். சிற்றூர்களில் வாழும் ஆண்கள் பெரும்பாலும் வேட்டியும், பெண்கள் பெரும்பாலும் புடவையும் அணிவர். வயது வந்த இளம்பெண்கள் ஏறத்தாழ 20 வயது வரை தாவணி அணியும் வழக்கமும் உண்டு. சிறுமிகள் பாவாடை-சட்டை அணிவதும் வழக்கம். வேட்டியும் புடவையும் தமிழ் நிலப்பகுதிகளில் பொது இடங்களில் ஏற்புடைய கண்ணியமான உடையாக விளங்குகிறது.                     "இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுடிதார் முதன்மை பெற்றுள்ளது. நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர். சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சைக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர். விலை மலிவானது; ஏற்றத்தாழ்வு காட்டாதது; விரைவாக நடக்க உதவுவது; இளமையாகக் காட்டுவது. இடையைக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டுச் சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது.                                  ஜனவரி 6-ந் தேதி சர்வதேச வேட்டி தினம் கடைப்பிடிக்கப்படுவதை யொட்டி தமிழர்களின் பாரம்பரிய உடைகள் அணிவதில் ஈர்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.                                                                 நாம் அணியும் ஆடைகளே நமக்கு அடையாளம் தருகின்றன. நமது கலாசாரத்தைச் சொல்கின்றன. தமிழர்கள் என்பதை வேட்டி, சட்டைகளே வெளிக்காட்டுகின்றன. உலக பாரம்பரியங்களை பொக்கிஷமாக பாதுகாக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட 'யுனஸ்கோ' அமைப்பு தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தை நன்கு உணர்ந்து வேட்டிக்கு உலக அங்கீகாரத்தை அளித்து இருக்கிறது. 2016-ம் ஆண்டு அந்த அமைப்புதான் ஜனவரி 6-ந்தேதியை சர்வதேச வேட்டி தினமாக அறிவித்தது.அதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் வேட்டி அணிய வேண்டும் என்ற உணர்வு இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. அதற்காக யுனஸ்கோ அமைப்பை பாராட்ட வேண்டும்.                             
                    இங்கிலாந்துக்காரர் சொல்லி வேட்டி சட்டையை களைந்து விட்டு பேண்ட் சூட்டுக்கு மாறிய நாம், அமெரிக்காவில் உள்ள நிறுவனம் சொல்லித்தான் மீண்டும் வேட்டியை அணிய வேண்டியது இருக்கிறதே என்பதுதான்!                                                                      எப்படியேனும் நமது பண்பாடு பாதுகாக்கப்படுவது நல்லதுதானே? அன்றாட பணிக்கு பேண்ட்-சட்டையில் வரும் அரசு ஊழியர்கள் அன்றைய தினம் மட்டும் வேட்டி-சட்டையில் வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதே போன்று சர்வதேச வேட்டி தினத்தன்று மட்டும் கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து வருவதற்கு கல்வி நிறுவனங்கள் பச்சைக்கொடி காட்டி இருக்கின்றன.  வேட்டி அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதோடு சர்வதேச வேட்டி தின கொண்டாட்டம் முடிந்து விடுகிறது. அப்புறம் அந்த வேட்டி, வீட்டு பீரோவின் ஓரத்தில் ஓய்வெடுக்கச் சென்று விடுகிறது. எனவே சர்வதேச வேட்டி தினம் சம்பிரதாயத்திற்காக கடைப் பிடிக்கப்படுகிறதா? அல்லது இளைய தலைமுறையினரிடம் பாரம்பரிய ஆடைகள் அணிய வேண்டும் என்ற ஈர்ப்பை ஏற்படுத்துகிறதா? என்பது பற்றிய கருத்துகளை இதோ கீழே பதிவிட்டிருக்கிறார்கள் பாருங்களேன்:- வேட்டி அணிவது தனி கெத்து தான் பெங்களூரு ஒயிட்பீல்டுவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த பிரசாத்:- "கேரளாவில் கல்லூரி மாணவர்கள் வேட்டி அணிவதை கெத்தாக கருதுகின்றனர். கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளின் போது மாணவர்களும், மாணவர்களுக்கு போட்டியாக மாணவிகளும் வேட்டி அணிந்து வருவார்கள். நானும் கூட கல்லூரி படிக்கும் காலங்களில் வேட்டி அணிந்து இருக்கிறேன். தற்போதும் கோவில்களுக்கு சென்றால் வேட்டி அணிந்து தான் செல்கிறேன். கோவிலுக்கு வேட்டி அணிந்து செல்லும் போது சிலர் நம்மை ஒரு மாதிரி தான் பார்க்கிறார்கள். அதற்காக நமது பாரம்பரியமான உடையான வேட்டியை அணியாமல் இருக்க முடியுமா?. பாரம்பரிய உடைகள் அணிவதை இளைஞர்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்''.                                                 இந்திராநகரில் வசித்து வரும் மோகன்:- "நமது பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதில் இன்றைய இளைஞர்கள் அதிக தயக்கம் காட்டுகின்றனர். இதற்கு காரணம் கலாசார மாற்றம் தான். வேட்டி அணிந்து வெளியே சென்றால் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இளைஞர்கள் நினைக்கின்றனர். இந்த எண்ணத்தை முதலில் மாற்றி கொள்ள வேண்டும். பொங்கல் பண்டிகையின் போது நமது பராம்பரிய உடையான வேட்டியை அணிவதே நமக்கு பெருமை. வேட்டி அணிவது நமது கலாசாரம், பெருமையை பிரதிபலிக்கிறது. டிப்-டாப் உடைகள் அணிந்து கொண்டு 10 இளைஞர்கள் ஒன்றாக செல்லும் போது, அதில் ஒருவர் மட்டும் வேட்டி அணிந்து சென்றால் அவர் மற்றவர்களிடம் இருந்து கெத்தாக தெரிவார். இன்றைய வாலிபர்கள் வேட்டி அணிய வேண்டுமா? என்று முகம் சுழிப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கும்''.                                                                                               ஜெயசிங்:- "எனக்கு வேட்டி கட்டிகொள்வதில் அதிக ஆர்வம். ஆனால் எனக்கு வேட்டி கட்ட தெரியாது. நான் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் போது பேண்ட் தான் அணிந்து செல்கிறேன். சிரமம் இன்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி கூட தற்போது உள்ளது. எனது நண்பர்கள் சிலர் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டியை வாங்கி கட்டியதை பார்த்து உள்ளேன். அந்த வேட்டியை கண்டிப்பாக வாங்கி ஒரு முறையாவது வேட்டி கட்டி கொள்வேன். வேட்டி நமது பராம்பரிய உடை. அதை மறுக்க முடியாது. ஆனாலும் சிலர் இடுப்பில் நிற்காது என்ற காரணத்தால் வேட்டியை கட்ட தயக்கம் காட்டுகின்றனர்''.                       இன்றைய காலக்கட்டத்தில் பெங்களூரு நகரில் என்னை போன்ற கல்லூரி மாணவர்கள் வேட்டி அணிந்து சென்றால் நிச்சயம் கேலி, கிண்டலுக்கு ஆளாகுவார்கள். நவீன காலக்கட்டத்தில் புதிய, 
                     புதிய ஆடைகள் அணிவதில் தான் பெருமை. அதற்காக பாரம்பரிய உடை அணிந்தால் பெருமை இல்லை என்று கூறவில்லை. வேட்டிகளை காட்டிலும் பேண்ட் சவுகரியமானது. வேட்டி கட்டி கொண்டு ஓடும் பஸ்சில் ஏற முடியுமா?. ஜீன்ஸ் பேன்ட்டில் கறை படிந்தாலும் கூட பேஷன் என்று சொல்லி விடலாம். வேட்டியில் கறை படிந்தால் அந்த கறை போகாது. பெரிய நகரங்களில் வேட்டி அணிந்து சென்றால் அழுக்கு படிந்து வேட்டி பாழாய் போய் விடும்''. வேட்டி வாரம் ஜனவரி 6-ந்தேதி சர்வதேச வேட்டி தினம் என்றாலும் தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை வேட்டி வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதுபோல் தமிழர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்களோ அங்கும் அவர்கள் வேட்டி அணிந்து பண்டிகை நாட்களை கொண்டாடுவதையும், கோவிலுக்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். வேட்டி விற்பனையை அதிகரிக்க ஜவுளி நிறுவனங்கள் கவர்ச்சிக்கர சலுகைகளை அறிவித்து உள்ளன. இளைஞர்கள் சிரமமின்றி அணியும் வகையில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி, பாக்கெட் வைத்த வேட்டி என்று வேட்டியிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. நாம் பாரம்பரிய உடைகளை தினமும் அணியாவிட்டாலும்கூட விழாக்காலங்களிலும் முடிந்தால் வாரத்தில் ஒரு தினமேனும் அணிவோம் என்றால் நெசவாளர்கள் மட்டும் அல்ல நமது கலாசாரமும் பாதுகாக்கப்படும் என்பதில் மாற்றுக் இருக்க முடியாது.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo