தூத்துக்குடியில் தூங்கும் டாஸ்மாக் அதிகாரிகள்? குவாட்டர் விலை ரூ 135,விற்பனை செய்வது ரூ 140, குவாட்டர் பாட்டில் ரூ 165 ஆனால் விற்பனை ரூ 170,கள்ளச்சந்தையில் 24மணி நேரமும் மது விற்பனை
தூத்துக்குடி மாவட்டத்தில் 180 க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் இரண்டு அல்லது மூன்று விற்பனை பிரதிநிதிகள் உள்ளன. ஒவ்வொரு கடைகளுக்கும் ஆனால் அரசு நிர்ணயித்த விலையை டாஸ்மாக் கடை பணியாளர்கள் வசூல் செய்வது கிடையாது கூடுதலாக வசூல் செய்கின்றனர் 135 குவாட்டர் விலை 140 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது 165 ரூபாய் குவாட்டர் பாட்டிலை 170 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அது போல ஆப் பாட்டலுக்கு பத்து ரூபாய் வீதம் கூடுதலாக வசூலிக்கின்றனர் அதுபோல ஃபுல் பாட்டலுக்கு 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலிக்கின்றனர்.
அதுபோல பீர் பாட்டிலுக்கு 25 ரூபாய் கூடுதலாக வசூலிக்கின்றன, சராசரி நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் இந்த கூடுதல் தொகையை வசூலிப்பதன் மூலம் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை தினசரி கிடைக்கிறது.பண்டிகை காலங்களில் மதுபானம் அதிக அளவில் விற்பனை ஆகும் போது அப்பொழுது இதைவிட கூடுதலாக கடையில் உள்ள பணியாளர்களுக்கு கிடைக்கிறது.கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் சூப்பர்வைசர் மற்றும் பணியாளர்கள் மீது இன்று வரை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாஸ்மாக் தாசில்தார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தது கிடையாது காரணம் ஏன் என்று புரியவில்லை.
ஒவ்வொரு கடையிலும் கூடுதல் தொகைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் தொகையில் கீழ் அதிகாரிகள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் கொடுப்பதால் கண்டும் காணாமல் இருப்பதாக தெரிய வருகிறது.டாஸ்மாக் மதுபான கடையில் அங்கு இருக்கும் பணியாளர்கள் கூடுதலாக பாட்டிலுக்கு தொகை வைத்து வசூலிப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஆகையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உடனடியாக அரசு மதுபான கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சூப்பர்வைசர் மற்றும் பணியாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான் மதுபான பிரியர்களின் கோரிக்கையாகவே உள்ளது.தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மார்க் பாரில் 24 மணி நேரமும் அது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் காலையில் குறிப்பாக அதிகாலையில் காய்கறி மார்க்கெட் கடைக்கு வரும் வியாபாரிகள் குறிப்பாக கூலி தொழிலாளர்கள் இவர்கள் அதிகாலையிலேயே குவாட்டர் கள்ளச் சந்தையில் வாங்கி அவற்றை குடித்து விட்டு தான் கூலி தொழில் செய்கிறார்கள் இதனால் அவர்கள் சம்பளம் வாங்குவதில் பாதி டாஸ்மாக் கடைக்கு அவருடைய சம்பளம் செல்கிறது இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தூத்துக்குடியில் வறுமையில் வாடுகிறது இதனால் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் அவர்களுக்கு சத்தான உணவுகள் இல்லை குறிப்பாக அவருடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது மேலும் அந்த குடும்பத்தில் குடியினால் பல குழப்பங்கள் பிரச்சனைகள் சண்டைகள் உருவாகி காவல் நிலையம் சென்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு செயலில் அனுப்பும் நிலைமையும் உருவாகுகிறது மேலும் இதனால் பல கொலைகள் கொள்ளைகள் பல்வேறு குற்ற செயல் நடவடிக்கைகள் போன்றவை நடைபெறுகிறது ஆகையால் இவற்றையெல்லாம் டாஸ்மாக் நிறுவனம் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்த குடியினால் பல குடும்பங்கள் சீரழிகிறது எப்படி என்று சொன்னால் குடியினால் குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு பல்வேறு குழப்புகளுக்கு ஆளாகி குடும்பம் வறுமைக்கு தள்ளப்படுகிறது வறுமையில் ஒரு தொழிலாளியை தள்ளி அந்த பணத்தை அரசாங்கம் இயக்க வேண்டுமா என்பதுதான் பொதுமக்கள் கேள்வி குறிப்பாக இவர்கள் சம்பளத்தை வைத்து தான் அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் போடப்படுகிறது என்று குடிமகன்களே பேசுகிறார்கள் ஆக அந்த சிந்தனையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.