வருமானவரித் துறை மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் இணைந்து வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி 2023 செப் 12 ;வருமானவரித் துறை மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் இணைந்து வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
தூத்துக்குடியில் வருமானவரித் துறை மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் இணைந்து 12-09-2023 அன்று வரி செலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
நிகழ்ச்சியில் N. காசி சங்கர், IRS, உதவி ஆணையர், திருநெல்வேலி வருமானவரி அதிகாரி A. செண்பகம், மற்றும் வருமானவரி அதிகாரி T. சிவபாலன், தூத்துக்குடி ஆகியோர் முன் கூட்டி வரி செலுத்தும் முறை பற்றி எடுத்துரைத்தனர்.
அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் தலைவர் T.R. தமிழரசு மற்றும் பொது செயலாளர் சங்கர் மாரிமுத்து ஆகியோரும் உரையாற்றினார்கள்.
வரி செலுத்துவோரின் சந்தேகங்களுக்கு வருமானவரி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.