Onetamil News Logo

தூத்துக்குடியில் டீ ரூ 12,ஒரு நாளைக்கு ரூ 2லட்சம் வரை சம்பாத்தியம் செய்யும் டீ க்கடைகளில் கூட பேப்பர் கப்பில் டீ கொடுக்கும் அவலம்? 

Onetamil News
 

தூத்துக்குடியில் டீ ரூ 12,ஒரு நாளைக்கு ரூ 2லட்சம் வரை சம்பாத்தியம் செய்யும் டீ க்கடைகளில் கூட பேப்பர் கப்பில் டீ கொடுக்கும் அவலம்? 


 டீ, காபியை பேப்பர் கப்களில் குடிப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. பேப்பர் கப், டம்ளர் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றும்போது கரைந்து, அது ஒழுக வாய்ப்புள்ளதால், அதில் மெழுகு தடவப்படுவது உடல்நலனுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல் மெழுகுதான் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது பல பின்விளைவுகளை உண்டாக்கும் என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது, டீ, காபி, சூப் போன்ற சூடான பானங்களை அருந்தும்போது, இந்த மெழுகும் அந்த பானத்துடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்றுவிடும். இதனால் தேவையற்ற உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.
         பேப்பர் கப்பில் டீ அல்லது காபி போன்றவற்றைக் குடிப்பது உங்களுக்கு ஆபத்தானது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு பேப்பர் கப்பைக் கொண்டு காபி/ டீ குடிக்கும்போது, ஒரு நபர் மைக்ரோ பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்பை எதிர்கொள்கிறார் என்கிறார்கள். கப்பில் உள்ள ஒரு சூடான பானம் சிறிய பிளாஸ்டிக் துகள்களைக் கொண்டுள்ளதால் அது நம்மை பாதிக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது என்று Daily Mail-ன் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது.
          மேலும், இந்த கப்களில் ஒரு உள் லைனிங் (inner lining) இருப்பதால் அது நீரை வெளியேற்றாமல் தடுக்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை மறுசுழற்சி செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக, 100 மில்லி பேப்பர் கப்களில் சூடான நீர் ஊற்றப்பட்டு, கப்ஸ்களில் 15 நிமிடங்கள் அப்படியே விடப்பட்டன. இதன் பின்னர், சூடான நீர் ஒரு வலுவான நுண்ணோக்கி கொண்டு சோதிக்கப்பட்டது.
           ஒரு கப்பில் சராசரியாக 25,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். துத்தநாகம், ஈயம், குரோமியம் போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்களும் தண்ணீரில் காணப்பட்டன. இந்த நச்சு உலோகங்கள் அதே பிளாஸ்டிக் புறணிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. தண்ணீரில் காணப்பட்ட துகள்கள் மைக்ரான் போல பெரியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினர்.
                    இதுகுறித்து மேற்கு வங்காளத்தின் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் சுதா கோயல் கூறுகையில், “வழக்கமாக ஒரு சராசரி நபர் தினமும் 3 கப் டீ அல்லது காபியைக் குடிக்கிறார். ஒரு பேப்பர் கப்பில், 75,000 கண்ணுக்குத் தெரியாத சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்” அதில் இருப்பதாகவும் அவை விரைவாக மனிதர்களால் உட்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
           இந்த ஆய்வு Hazardous Materials ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் சுதா மேலும் குறிப்பிடுகையில், “மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அயனிகள், பல்லேடியம், குரோமியம் மற்றும் காட்மியம் போன்ற நச்சு கன உலோகங்கள் போன்ற அசுத்தங்களுக்கு கேரியர்களாக செயல்படுகிறது. இவற்றை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் காலப்போக்கில் உடல்நல பாதிப்புகள் தீவிரமாக இருக்கலாம்.”
             இருப்பினும், உணவு பேக்கேஜிங்கில் காணப்படும் பிளாஸ்டிக்கின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் காரணிகள் குறித்து இதுவரை எந்த ஆய்வும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பேப்பர் கப்களில் சூடான டீ, காபி போன்ற பானங்களைக் குடித்து வந்தால், அதிலுள்ள மெழுகு கரைந்து, நம் உடலுக்குள் சென்று கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை, அல்சர், குடல் புற்றுநோய் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo