Onetamil News Logo

கேன்சர் நோயை உருவாக்குவதற்கான முயற்சிகளை டீக்கடை உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் நியூஸ் பேப்பரில் வைத்து வடை விற்கும் அவலம்;உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?  

Onetamil News
 

கேன்சர் நோயை உருவாக்குவதற்கான முயற்சிகளை டீக்கடை உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் நியூஸ் பேப்பரில் வைத்து வடை விற்கும் அவலம்;உணவுப்பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்குமா?  


 கருப்பு மை குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து வெளியிட்டார். வெளியீட்டு அந்த குறும்படத்தை முழுமையாக பார்த்துவிட்டு செய்தியாளரிடம் அவர் கூறியதாவது இனிமேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நியூஸ் பேப்பரில் வைத்து வடை வழங்கக்கூடாது மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் கலெக்டர் உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் பல நகரங்களில் பல பேரூராட்சி பகுதிகளில் நியூஸ் பேப்பரில் வைத்து தான் வடையை வழங்குகிறார்கள். ஒரு சில கடைகளில் அதிகாரிகள் போல் யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக நியூஸ் பேப்பரை வைத்திருக்கிறார்கள், இலையையும் வைத்திருக்கிறார்கள், வெள்ளை காகித பேப்பர் வைத்திருக்கிறார்கள், அப்பாவி ஜனங்களுக்கு நியூஸ் பேப்பரில் வைத்து தான் வடை வழங்குகிறார்கள். இந்த கொடூரம் மிகப்பெரிய கொடூரம், கேன்சர் நோயை உருவாக்குவதற்கான முயற்சிகளை இந்த டீக்கடை உரிமையாளர்கள் செய்து வருகிறார்கள், இந்தப் பாவத்தை அவர்கள் தான் எடுத்துச் செல்லப் போகிறார்கள் என்பது உண்மையாகும்  தெய்வச் செயல்புரம், வல்லநாடு, வாகைக்குளம், புதுக்கோட்டை,கருங்குளம்,ஸ்ரீவைகுண்டம், ஏரல்,திருச்செந்தூர்,உடன்குடி,மெஞ்ஞானபுரம் போன்ற ஊர்களில் நியூஸ் பேப்பரில் வைத்து வடை விற்கும் அவலமானது நடைபெற்று வருகிறது உணவு பாதுகாப்புத் துறை உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.                                                            இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட  டீக்கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் பலமுறை தூத்துக்குடியில் நடைபெற்றது. அதில் பேசிய நியமன அலுவலர், செயற்கை கலர் சேர்க்காத, முழு முகவரியுடன் உள்ள டீத்தூள் பாக்கெட்டுகள் மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும், டீ, காபி போன்ற சூடான பானங்களையும் உணவுப் பொருட்களையும் ப்ளாஸ்டிக் பைகளில் பொட்டலமிடக்கூடாது, அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும், வடை, பஜ்ஜி போன்றவற்றை ஈக்கள் மொய்க்காதவாறும், தூசிகள் படாதவாறும் கண்ணாடி கூண்டுகளில் வைத்து விற்க வேண்டும், நுகர்வோர்களுக்கு வடை போன்ற உணவுப் பொருட்களை அச்சிட்ட நியூஸ் பேப்பரில் பார்சல் செய்யக்கூடாது, தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா மற்றும் மெல்லும் புகையிலையை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்ததோடு, மீறுவோர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். குறிப்பாக, டீ, காபி போன்ற சூடான உணவுப் பொருட்களை அனுமதியற்ற ப்ளாஸ்டிக்கில் பார்சல் செய்தால் அபராதம் விதிப்பு உள்ளிட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo