தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா ;பள்ளியில் இருந்து தான் கலெக்டர் முதல் அனைவரும் உருவாகுகிறார்கள் ஆசிரியர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு
பள்ளியில் இருந்து தான் கலெக்டர் முதல் அனைவரும் உருவாகுகிறார்கள் ஆசிரியர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளி தாளாளர் ரோஸ்மேரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கடந்த 10 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசுகையில் இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் நம்மை உருவாக்கியது ஆசிரியர் தான் நல்ல பழக்க வழக்கங்கள் ஓழுக்கங்கள் இவற்றை முதலில் பள்ளியில் கடைபிடிக்க வேண்டும் என்று நமக்கு அறிவரை வழங்கி எதிர்கால வளர்ச்சியில் அக்கறை கொண்டு பனியாற்றுகிறார்கள். இது போன்ற கண்டிப்புகள் இல்லை என்றால் நாமு; திசை மாற வேண்டிய நிலை வரும். படிக்கும் காலத்தில் எல்லோரையும் நல்லவர்களாக உருவாக்குகிறார்கள். படிப்பில் அனைவரும் கவனம் செலுத்துவதை போல் உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் அதற்கு விளையாட்டும் அவசியம், எதிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதேபோல் உங்களுக்கும் பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டும். எப்படி என்றால் ஓவ்வொரு வீட்டிலும் ஓவ்வொரு மரக்கன்று நடவேண்டும் கொரோனா காலக்கட்டத்தில் இயற்கை தான் நம்மை எல்லாம் பாதுகாத்தது மாநகராட்சியில் நான் பொறுப்பு வந்த பிறகு 2லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த பகுதியில் கூட பக்கிள் ஓடை பகுதியில் நடப்பட்டவை வளர்ந்து விட்டன. இதை செய்தவர்களுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் நன்மைகள் கிடைக்கும் மாநகரை தூய்மையாக வைப்பதற்கு நம்மிடம் இருந்து அந்த பழக்க வழக்கங்கள் தொடங்க வேண்டும். கலைஞர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது முதல்வர் தளபதியார் ஆட்சியில் ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. இது போல் பல சாதனைகளுக்கு மத்தியில் உங்களது சாதனைகளும் இந்த நாட்டிற்கு தேவை என்பதை உணர்ந்து பள்ளிப்படிப்பு ஒரு கட்டமாகவும் கல்லூரி படிப்பு அடுத்த கட்டமாகவும் நகர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் நாங்கள் படிக்கும் போது இப்போது இருக்கின்ற தொழில்நுட்பம் கிடையாது தற்போது உள்ள கால சூழ்நிலைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டங்களையும் ஆசிரியர்களையும் தெரிந்து கொண்டு நல்ல மாணவியாக உருவாக்குகின்றன. ஒவ்வொருவரும் திறமையை வளர்த்து கொண்டு சாதிக்க வேண்டும். என்று மனதார வாழ்த்துகிறேன். என்றார்.
பின்னர் பல்வேறு வகையான விளக்கங்களை எடுத்துகூறம் வண்ணமாக வில்லுப்பாட்டு கலைநிகழ்ச்சி போன்றவைகள் நடைபெற்றன..
விழாவில் மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவாணி மார்ஷல், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல், மற்றும் ஜோஸ்பர். பிரபாகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோஸ்பின் மேரி நன்றியுரையாற்றினார்.