வட்டிக்கு பணத்தை வழங்கும் ஆசிரியர்கள் ;ஏழை மக்கள் விழிபிதுங்குகிறார்கள் ;
மாணவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வளரும் மாணவர்களுக்கு வழிகாட்டி, வளர்ப்பு மற்றும் ஆதரவு அமைப்பை உருவாக்குகிறார்கள். ஆனால் இந்தக் கல்வியாளர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையைக் கொண்ட தனிநபர்கள், அவர்களில் பலர் குடும்பம் அல்லது அவர்களைச் சார்ந்திருக்கும் குழந்தைகளைக் கொண்டவர்கள்.
அவர்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களின் தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கான கூடுதல் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. சில எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்படும் நேரங்கள் இருக்கலாம். பெரும்பாலான ஆசிரியர்கள், தனியார் அல்லது அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், மாத வருமானத்திற்கு ஏற்றவாறு சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.நூற்றுக்கு 90 சதவீத ஆசிரியர்கள் இன்றைக்கு மாணவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் அந்த வகையில் இன்றைக்கு ஆசிரியர் பெருமக்கள் நூற்றில் 80% மக்கள் சுயநலம் கருதி மாணவர்கள் மேல் அக்கறை இல்லாமல் வாழ்கிறார்கள் இந்த ஆசிரிய பெருமக்கள் நியாயமாக நேர்மையாக மனசாட்சிக்கு கட்டுப்பட்டு இருந்தால் பாரம்பரிய உணவு மறைந்திருக்காது. பாரம்பரிய கலைகள் மறைந்திருக்காது. பாரம்பரிய மருத்துவம் மறைந்து இருக்காது. பாரம்பரிய விளையாட்டுக்கள் மறைந்து இருக்காது காரணம் ஆசிரிய பெருமக்கள் ரோல் மாடலாக இல்லை என்பதுதான் சிந்தித்துப் பார்க்கக் கூடிய ஒரு தருணத்தில் இருக்கிறோம். இன்றைக்கு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் கணவன், மனைவி இரண்டு பேரும் ஆசிரியர்கள் என்று சொன்னால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை சம்பாத்தியம் செய்கிறார்கள். அப்படி சம்பாத்தியம் செய்கின்ற பணத்தை அவர்கள் வட்டிக்கு விடக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் ஏன்?என்று சொன்னால் அதிகமான சம்பளம் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற ஆசிரியர்களிடமும் பணத்தை வாங்கி ஆசிரியர்கள் வட்டிக்கு விடுகிறார்கள், சிகரெட் அடிக்கிறார்கள், தண்ணீர் அடிக்கிறார்கள், மது குடிக்கிறார்கள் இருக்கிற அனைத்து கெட்ட பழக்கத்தையும் ஆசிரிய பெருமக்கள் அதில் நீந்தி வருகிறார்கள். அந்த வகையில் மெஞ்ஞானபுரம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல ஆசிரியர் பெருமக்கள் வட்டிக்கு பணம் விடும் வேலையை செய்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்கள் இன்சூரன்ஸ் தொழில் செய்கிறார்கள் இப்படி ஊரில் இருக்கும் அனைத்து வேலைகளையும் பகுதி நேர வேலைகளாக செய்ய ஆரம்பித்து வருகிறார்கள் ஒரு நபருக்கு ஒரு வேலை இருந்தால் போதும் ஆனால் ஆசிரியரோ மக்கள் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் பெற்றாலும் மாற்று வேலைகளையும் மற்றவர்களுக்கு அந்த பணி கிடைக்க விடாமல் இவர்கள் தடுத்து விடுகிறார்கள் காரணம் நாம் மட்டுமே வாழ வேண்டும் மற்றவர்கள் வாழக்கூடாது என்கின்ற சிந்தனை தான் அங்கே மேலோங்குகிறது ஆகையால் எல்லாருக்கும் ரோல் மாடலாக ஆசிரிய பெருமக்கள் இருந்தால் தான் அடுத்த தலைமுறை பாரம்பரிய கலைகள் உணவுகள் உடைகள் மருத்துவம் போன்றவை பாதுகாக்கப்படும் என்பது உண்மையாகும் இனி மேலாவது ஆசிரிய பெருமக்கள் ரோல் மாடலாக நடந்து கொள்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்