Onetamil News Logo

ஐ.ஏ.எஸ்.படித்துக்கொண்டே 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை

Onetamil News
 

ஐ.ஏ.எஸ்.படித்துக்கொண்டே 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை


தாளவாடி ,2019 நவம்பர் 11 ; ஐ.ஏ.எஸ்.படித்துக்கொண்டே 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான பெண் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தாளவாடி அருகே உள்ள மெட்டல்வாடியை சேர்ந்த நாகராஜின் மகன் பிரதாப் (வயது 30). முதியனூர் கிராமத்தை சேர்ந்த புட்டுசாமியின் மகள் பல்லவி என்கிற சரஸ்வதி (23). இவர் பி.இ. சிவில் படித்து முடித்திருந்தார். இந்த நிலையில் பிரதாப்புக்கும், சரஸ்வதிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.திருமணத்துக்கு முன்பே  சரஸ்வதி ஐ.ஏ.எஸ். படித்து வந்தார். அதன் பின்னரும் இவர் காரைக்குடியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். மேலும் அவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி சரஸ்வதி கடந்த மாதம் மெட்டல்வாடி வந்தார். அப்போது அவருக்கு கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மேலும் அதையே நினைத்து அவர் கவலைப்பட்டுள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வந்தனர். எனினும் அவர் ஆறுதல் அடையவில்லை. இந்த நிலையில் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 5-ந் தேதி சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டுவிட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்தார். இதுபற்றிய தெரியவரவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி நேற்று முன்தினம் இறந்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo