Onetamil News Logo

நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி,ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், ஒருங்கிணைப்பாளர், பேரா.பாத்திமா பாபு

Onetamil News
 

நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களுக்கு நன்றி,ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், ஒருங்கிணைப்பாளர், பேரா.பாத்திமா பாபு


ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், ஒருங்கிணைப்பாளர், பேரா.பாத்திமா பாபு, வெளியிட்டுள்ள அறிவிப்பு ; 2018 ஆம் ஆண்டு  தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக் கோரி நடைப்பெற்ற மாபெரும் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்ற பேரணியில்
நிராயுதபாணியாக கலந்து கொண்ட மக்கள் மீது   நடத்தப் பட்ட  துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட  
நீதியரசர் அருணா ஜெகதீசன் தனிநபர் கமிஷன் தனது அறிக்கையை  அரசிடம் மே 18, 2022 அன்று சமர்ப்பித்துள்ளது.அந்த அறிக்கையின் ஒரு பகுதி இன்று ஆகஸ்ட் 18, 2022  அன்று வெளியிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுஅதே ஆகஸ்ட் 18 அன்று  மாண்புமிகு நீதியரசர்கள் சிவஞானம், பவானி சுப்பராயன்  அவர்கள் வழங்கிய தீர்ப்பை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையில் காணப்படும் அதிர்ச்சி தகவல்கள் பின் வருமாறு:
எளிதில் கிளர்ந்து விடக் கூடிய பிரச்சனை என்பதால் நீதியரசர் முழுமையாகவும், மிகுந்த நுணுக்கமாகவும் ஆய்வுசெய்து, தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்துள்ள மிகக் கொடூரமான சம்பவம் இது என்று தெளிவாக பதிவு செய்துள்ளார்.பெருந்திரள் வன்முறை வெடித்ததால், துப்பாக்கி சூட்டில் ஈடுபடவேண்டியது வந்தது என்ற முந்தைய அரசின் கூற்றை புறந்தள்ளி, போராடிய மக்கள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபட்டார்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலையை நோக்கி வந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை  காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பல நாட்கள் கழித்து, உயிர் இழந்தார்.
          சுற்றுச்சூழலுக்கு கடும் கேடு விளைவித்துக் கொண்டிருந்த ஆலையை மூடக்கோரி அமைதியான முறையில் நடந்து கொண்டிருந்த போராட்டம், முன்பெப்பொழுதும் கண்டறியாத வன்முறையில் முடிந்தது. 
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர்.
தமிழகத்தில்  முதல் முறையாக  இணையதளம் முடக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரும் காவல்துறையின் உயர் அதிகாரிகளும் முறையான ஒருங்கிணைப்
பின்றியும், அதீத முரட்டு பலத்தை பிரயோகித்தும் மக்கள் கூட்டத்தை தாக்கியுள்ளனர் என்று கடுமையாக சாடியுள்ளார்.
       நீதியரசர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
          தப்பியோடிய மக்களையும் சுட்டிருக்கிறார்கள். 13 பேரில் 6 பேருக்கு தோட்டா தலையின் பின்புறத்தில் வழியே நுழைந்து முன்புறமாக வெளியேறியுள்ளது.
According to the report, the police “had fired on the fleeing protesters...”. It further says: “Here is a case of police indulging in shooting from their hide-outs at the protesters who were far away from them.” 
காவல் துறையினர் மறைந்திருந்து மக்களை சுட்டிருக்கிறார்கள்.
துப்பாக்கி குண்டுகள் எங்கிருந்து வருகின்றன என்பதே புரிபடாமல் மக்கள் நாலாபுறமும் ஓடியிருக்கிறார்கள்.
          இத்தகு சூழலில் கடைப்பிடிக்க படவேண்டிய நடைமுறைகள் எவையும் கடைப்பிடிக்கப் படவில்லை.
கண்ணீர் புகை பயன்படத்தப்பட வில்லை, தண்ணீர் பீச்சப்படவில்லை.
வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை.
இடுப்புக்கு, முட்டுக்கு  கீழே சுடுவது   என்ற முறை கடை பிடிக்கப் படவில்லை.
நெடுந்தொலைவு தோட்டாக்கள் பயன்படுத்தப்
படவில்லை. 
நீதியரசர் அருணா ஜெகதீசன் படுகொலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை பெயர் குறிப்பிட்டே பட்டியலிட்டுள்ளார்.
THe then Inspector General of Police (South Zone) Shailesh Kumar Yadav (now ADGP, Police Welfare); Deputy Inspector General of Police (Tirunelveli Range) Kapil Kumar C. Sircar (now an Additional Commissioner of Police, Chennai city); Superintendent of Police (Thoothukudi) P. Mahendran (now Deputy Commissioner (Admn), Chennai); and Deputy SP (Thoothukudi) Lingathirumaran, and three Inspectors, two Sub-Inspectors, one head constable and seven constables.
மேற்குறிப்பிட்டுள்ள   அதிகாரிகள் வரம்பு மீறி செயல்பட்டுள்ளார்கள்.
அரசு அவர்களுக்குரிய தண்டனையை எந்த பாரபட்சமும் இன்றி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
உதவி ஆய்வாளர் ரேய்னஸ் துப்பாக்கி சூடு நடத்தியது IG கவனத்துக்கு கொண்டுசெல்லப்
படவில்லை  என்ற பதிவு  அறிக்கையில் காணப்படுகிறது.
மேலும், ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதற்கு ஒப்பாக,சுடலைக்
கண்ணு எனும் காவலர் ஓரு SLR ஐ சுமந்து கொண்டு, தூத்துக்குடியின் அனைத்து பகுதிகளிலும் காணப் பட்டார். அவர் 17 சுற்று துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்.
என்றும் காணப்படுகிறது.
அன்றைய மாவட்ட ஆட்சி தலைவர் N. *Venkatesh ஆணையத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகிறார்.
for his “abdication of responsibility, gross negligence and ill-conceived decisions”. 
தூத்துக்குடியில் ஏறக்குறைய ஒரு கலவரச்சூழலே ஏற்பட்டிருக்க , அவர் மாவட்ட தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேறி 100 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலுக்கு வேறு பணியாக சென்றுள்ளார்.
ஆணையம் அவர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பணித்துள்ளது.
இவர்கள் தவிர 3 மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் தண்டிக்கப் படவேண்டியவர்கள் என்று நீதியரசர் பணித்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பதாக உத்தரவாதம் அளித்தார்கள்.
அவர்களை ஆட்சியில் அமர்த்திவிட்டோம். 
எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்.
கீழ் கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப் படவேண்டும்.
 1. நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வேறே என்னென்ன சொல்கின்றது என்பதை அறிய மக்கள் உரிமை பெற்றவர்கள்.
எனவே முழுமையான ஆவணத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்
2. ஆணையம் குறிப்பிட்டுள்ள அத்தனை குற்றவாளிகளும் உடனடியாக தண்டிக்கப் படவேண்டும்.
3. CBI அறிக்கை ஒரேயொரு காவல் அதிகாரியை அடையாளப்
படுத்தியுள்ளது.
CBI அறிக்கையை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo