Onetamil News Logo

தூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன்  ரூ50 க்கு நாளை வழங்கப்படும்.

Onetamil News
 

தூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன்  ரூ50 க்கு நாளை வழங்கப்படும்.


தூத்துக்குடி 2020 மார்ச் 31 ; தூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன்  ரூ50 க்கு நாளை வழங்கப்படும்.
உலக அளவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளிவர அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை விநியோகிக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மக்களுக்கு பெருத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. 
இந்த நிலையில் பெரிசன் பிளாசாவில் ஏப்ரல் 1 முதல் தூத்துக்குடி போல்பேட்டை பெரிசன் பிளாசாவில் 17 வகை காய்கறி கொண்ட காய்கறி பை ரூ250 க்கு நாளை முதல் வழங்கப்படுகிறது. பீன்ஸ் ,தக்காளி ,அவரைக்காய் ,முட்டைக்கோஸ் ,கத்தரிக்காய் ,பல்லாரி ,மிளகாய் ,உருளைக்கிழங்கு ,மாங்காய் காரட் ,கோவக்காய் ,பீட்ரூட் ,முருங்கைக்காய் ,முள்ளங்கி ,பீர்க்கங்காய் ,சவ்சவ் ,பாகற்காய் உட்பட மொத்தம் - 7கிலோ ரூபாய் 250/- மட்டுமே., தூத்துக்குடி பெரிசன் பிளாசாவில் 3 கிலோ தக்காளி பையுடன்  ரூ50 க்கு நாளை வழங்கப்படும்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo