திருக்குறிப்பு தொண்டர் நாயனார் ஆரம்பப்பள்ளி வண்ணார் பேட்டையில் 31 வது ஆண்டு விழா, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சரவணகுமார் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார் ஆரம்பப்பள்ளி வண்ணார் பேட்டையில் 31 வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ஆர் சரவணகுமார் பங்கேற்று பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை மூலமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால் கல்வி தரம் மேம்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி வழியில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இல்லம் தேடிக் கல்வி,பள்ளி மேலாண்மை குழு,என்னும் எழுத்தும் உட்பட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார்.இதனால் பள்ளி மாணவர்கள் எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். இன்றைக்கு கல்வித்துறை திமுக ஆட்சியில் மேம்பட்டு இருக்கிறது. மேம்பட்டு கொண்டிருக்கிறது. இதை கவனத்தில் கொள்ள வேண்டும் அதைப் போல இந்த பள்ளிக்கூடத்திற்கு எது தேவையோ? அவையெல்லாம் நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அதற்கான உதவிகளை செய்வேன் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் பி கருப்பசாமி வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை பள்ளி ஆசிரியை சண்முக லட்சுமி தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கனக செல்வி வரவேற்புரை வழங்கி ஆண்டறிக்கையை வாசித்தார். பள்ளி பொருளாளர் சக்திவேல் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கொம்பன், எஸ் காளியப்பன், பி முருகவேல், எஸ் குமாரலிங்கம், எஸ் சுடலை, எஸ் பரமசிவம், ஏ சக்திவேல், எஸ். மோகன்ராஜ், எம் ராமலிங்கம், கே ராஜ்குமார், ரெங்கசாமி, தங்கம், முருகேசன், மாடசாமி, வீரபுத்திரன், முருகவேல், சுதாகர், மாடசாமி, மாரிமுத்து, மாடசாமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் சங்கம் ஊர் பொதுமக்கள் வண்ணார்பேட்டை தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் பரமசிவம், செயலாளர் மாடசாமி, பொருளாளர் சக்திவேல், துணைச் செயலாளர்கள் காளியப்பன், முருகவேல், ஆலோசர்கள் கொம்பன், குமரலிங்கம், ரெங்கசாமி, பள்ளி ஆசிரியர்கள் கனக செல்வி, சண்முக லட்சுமி, மாலினி, ஜெயா, மாரி, மகேஷ் உட்பட பலர் ஏற்பாடு செய்தனர்.