தூத்துக்குடி கனிமொழி எம்.பிக்கு விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் வாழ்த்து
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சில தினங்களுக்கு முன்பு திமுக மாநில துணை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பொறுப்பேற்றிருக்கும் கனிமொழி எம்.பியை குறிஞ்சிநகரில் உள்ள அவரது இல்லத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளர் கா.மை. அகமது இக்பால் தலைமையில்; சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தினர்.
உடன் மாவட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிறுத்தைகுமார், முன்னாள் மாவட்ட செய்தித் தொடர்பாளர் செல்வக்குமார், வணிகரணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை முன்னாள் மாவட்ட அமைப்பாளர் வேந்தன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேந்திரன், ராஜீவ்காந்தி நகர் முகாம் பொறுப்பாளர் சிறுத்தை ஷேக், செயலாளர் டேனியல் மற்றும் அபு, முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.