கலைஞர் நூற்றாண்டு விழாவை வடக்கு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி 2024 தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை வடக்கு மாவட்டம் முழுவதும் ஒன்றியம் மாநகரம் பேரூர் கிளைக்கழகம் என பட்டிதொட்டி எங்கும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுபோட்டி, கட்டுரைபோட்டி, நடத்தி திராவிட கொள்கை வரலாறுகளை எடுத்துச்செல்ல வேண்டும். கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளிகள் வழங்கப்படும். ஒரு மாதத்தில் நான்கு ஊர்கள் வீதம் வடக்கு மாவட்டத்தில் உள்ளடக்கிய அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவி விளையாட்டு போட்டிகள் என பலவற்றை நடத்தி தமிழ் மொழிக்காக அறும் பாடுபட்ட கலைஞரின் வரலாறுகளையும் அவரது ஆட்சியின் சாதனைகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும். ஜீன் 3ம் தேதி அதே போல் கலைஞர் பிறந்தநாளன்று அனைத்து இடங்களிலும் கலைஞர் படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி கொள்கை பாடல்களை ஒலிபரப்ப செய்து பட்டொளி வீசி பறக்கும் வகையில் கொடிகம்பத்தில் புதிய கொடியேற்ற வேண்டும் தேர்தல் நேரத்தில் சிலர் சீன் போட்டுக்கொண்டு மக்களை குழப்ப வருவார்கள் அதையெல்லாம் நாம் முறியடிக்க வேண்டும். தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டை சட்ட போராட்டத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து முதலமைச்சர் வெற்றி கண்டுள்ளார். இதுபோன்று பல சாதனைகள் நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். எழுச்சியுடனும் உற்சாகத்துடனும் அனைவரும் பணியாற்ற வேண்டும். வாட்சப் உள்ளிட்ட பலவற்றில் தவறான கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். 2024 தேர்தலில் நாம் வெற்றி பெற முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அமைச்சர் பெற்றுக்கொண்டார். எல்லோருக்கும் எல்லாம் என்ற குறிக்கோளுடன் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் வந்துள்ளது. குறிப்பாக மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், மாணவ மாணவியர் கல்வியில் உயர புதுமைப்பெண்; திட்டம் நான் முதல்வன் திட்டத்தில் காலை உணவு சிற்றுண்டி செப்டம்பர் 15ல் மகளிருக்கு 1000 உரிமைத்தொகை வேலைவாய்ப்பு பெற பல்வேறு தொழிற்சாலைகள் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் 1000 கோடியில் பர்னிச்சர் பூங்கா 30 கோடியில் மினி டைட்டல் பார்க், 80 சதவீத தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் ஜல்லிக்கட்டு தடையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வாதாடி பெற்றுக் கொடுத்தது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக 24 மணிநேரமும் உழைத்து வரும் முதல்வரை இக்கூட்டம் பாராட்டுகிறது. திமுகவை தோற்றுவித்த அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவை கட்டிக்காத்து 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றவர் கலைஞர். தன்னுடைய கடைசி காலம் வரை தமிழ் தமிழர் நலன் சமத்துவம் சமூகநீதி என்று பாடுபட்டவர் அவர் நம்மைவிட்டு சென்றாலும் அவரது கொள்கை கோட்பாடுகளில் இன்றைய முதல்வர் இயக்கத்தை வழிநடத்தி வருகிறார். கலைஞர் போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று இந்திய ஜனநாயக காவலராக திகழ்ந்தவர். பன்முக ஆற்றலை அடுத்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வீதமாக பொதுக்கூட்டங்கள் கவியரங்கங்கள் கருத்தரங்கங்கள் நடத்துவது குறித்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், இலக்கிய அணி அமைப்பாளர் மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செந்தில்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், மற்றும் கருணா மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.