நாடக நடிகர் பாடகர் எழுத்தாளர்கள் என அனைவரையும் முதலமைச்சர் கௌரவிக்கிறார். டிஎம்எஸ் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி புகழாரம்
தூத்துக்குடி 2023 மார்ச் 24 ; நாடக நடிகர் பாடகர் எழுத்தாளர்கள் என அனைவரையும் முதலமைச்சர் கௌரவிக்கிறார். டிஎம்எஸ் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் சார்பில் திரைப்பட பாடகர் டிஎம் சௌந்தர்ராஜன் 100வது பிறந்தநாளை யொட்டி நடைபெற்ற சிறப்பு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில் திரைப்பட துறையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள டிஎம் சௌந்தராஜனை கௌரவிக்கும் வகையில் அவர் வாழ்ந்த பகுதியில் உள்ள சாலைக்கு டிஎம் சௌந்தர்ராஜன் பெயர் சூட்டப்பட்டு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதே போல் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் மிகப்பெரிய இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள நாடக நடிகர்கள் பாடகர்கள் எழுத்தாளர்கள் என அனைவரையும் தமிழக முதலமைச்சர் தளபதி கௌரவிக்கிறார். டிஎம்எஸ் பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் மனதிற்கு இதமாக இருக்கும் துன்பம் இருக்கும் சூழ்நிலையில் இவரது பாடல்கள் மூலம் மனமகிழ்ச்சி அடையலாம். இன்னிசை நிகழ்ச்சியில் ஓருவகையில் நமக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. உலகத்தில் உள்ள தமிழர்கள் இருக்கும் வரை டிஎம்எஸ் புகழ் நிலைத்திருக்கும் கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆட்சியின் போது கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பாடியுள்ளார். இது போன்று மிகப்பெரிய ஆன்மீக ஈடுபாடு கொண்ட டிஎம்எஸ் முருக பக்தராக விளங்கியவர் அவருடைய பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொழிலதிபர்கள் டிஏ தெய்வநாயகம், ரத்னா தர்மராஜ், தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செங்குட்டுவன், மாநில திமுக பேச்சாளர் இருதயராஜ், உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் மேலூர் கூட்டுறவு வங்கி பொறுப்பு தலைவர் சிவசுப்பிரமணியன், மாநில மதிமுக மீனவரணி செயலாளர் நக்கீரன், தொண்டரணி துணை செயலாளர் பேச்சிராஜ், இலக்கிய அணி துணைச்செயலாளர் மகாராஜன், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அருள், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர் துரைச்சி, திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், டிஎம்எஸ் பக்த பாசறையை சேர்ந்த கோவிந்தராஜ், சௌந்தர்ராஜன் மற்றும் ஜோஸ்பர், உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து இசைகலைஞர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை சீலன் ஸ்ருதி, அன்புமணி வேம்புராஜ், செய்திருந்தனர்.