இயேசுவின் தூதுவர் என்றும் தன்னை புதைத்தால் 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன் என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம்
ஆப்பிரிக்கா 2021 ஆகஸ்ட் 28 ; இயேசுவின் தூதுவர் என்றும் தன்னை புதைத்தால் 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன் என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் தான் இயேசுவின் தூதுவர் என்றும் தன்னை புதைத்தால் 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன் என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இயேசு கிறிஸ்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த பிறகு கல்லறையில் அடைக்கப்பட்ட அவர், இறப்பை வென்று 3ஆவது நாள் உயிர்த்தெழுவார். அந்த 3-வது நாளை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறாக கொண்டாடி வருகிறார்கள். அதாவது புனித வெள்ளியிலிருந்து மூன்றாவது நாள் ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவை சேர்ந்தவர் பாதிரியாரான ஜேம்ஸ் சக்காரா (22). இவர் இயேசுவின் தூதர் என்று தன்னை அறிவித்துக் கொண்டார். பின்னர் இயேசுவை போல் தானும் 3 நாட்களில் உயிர்த்தெழுவேன் என கூறியிருந்தார். இதையடுத்து அவர் இருக்கும் தேவாலயம் பகுதியில் ஒரு இடத்தில் குழிதோண்டினார்.
அதில் தன்னைத் தானே புதைத்துக் கொண்டார். அப்போது அவர் பைபிளில் உள்ள இயேசுவின் பொன்மொழிகளை படித்தார். சவக்குழியில் படுத்த பாதிரியாரின் கைகளை மற்றொரு பாதிரியார் கட்டியுள்ளார். பின்னர் மணலை போட்டு அந்த சவக்குழியை மூடியுள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு இவர்கள் அந்த சவக்குழியை தோண்டி பார்த்தனர். அப்போதுதான் பாதிரியார் உயிரிழந்தது தெரியவந்தது.இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பாதிரியாரின் உடலை எடுத்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கைகளை கட்டி இந்த உயிரிழப்புக்கு துணை போன இன்னொரு பாதிரியாரை கைது செய்தனர்.பாதிரியார் ஜேம்ஸுக்கு உதவியாக இருந்த இரு ஊழியர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இறந்து போன பாதிரியாரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். குழியில் புதையும் சம்பவத்தை ஜேம்ஸ் வேறு யாரிடமும் கூறாமல் இருவரிடம் மட்டுமே கூறி அவர்களின் ஒத்துழைப்போடு இதை செய்துள்ளது தெரியவந்தது