Onetamil News Logo

விவசாயிகள் குறைவான விலைக்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்ய வேண்டாம் என்று வேளாண்மை துணை இயக்குநர்  வேண்டுகோள் 

Onetamil News
 

விவசாயிகள் குறைவான விலைக்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்ய வேண்டாம் என்று வேளாண்மை துணை இயக்குநர்  வேண்டுகோள் 


தூத்துக்குடி 2020 மார்ச் 31 ; தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் புதூர் வட்டார விவசாயிகள் குறைவான விலைக்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்ய வேண்டாம் என்று வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி  மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்  (வேளாண் வணிகம்) வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்  கூறியிருப்பதாவது....
புதூர் மற்றும் விளாத்;திகுளம் வட்டாரத்தில் நடப்பாண்டு முண்டு மிளகாய் வத்தல் சுமார் 12 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது தீவிரமாக அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டாரத்தில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டததின் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மிளகய் வத்தல் கொள்முதல் மற்றும் தரம் பிரித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது உள்ள தடைக்காலத்தை பயன்படுத்தி வியாபாரிகள் விவசாயிகளிடம் மிளகாய் வத்தலை குறைவான விலைக்கு கொள்முதல் செய்;யக்கூடிய சூழல் உள்ளது. தமிழ்நாடு அரசு தற்போது விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களிடம் உள்ள மிளகாய் வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூட கிட்டங்கி மற்றும் பதப்படுத்தும் நிலையங்களில் வாடகை கட்டணம் இன்றி ஒரு மாதம் வரை இருப்பு வைத்து கொள்ளலாம். மேலும் இருப்பு வைத்துள்ள விளைபொருட்களின் மதிப்பில் 75 சதவீதம் வரை அடமான கடனும் பெறலாம். 
மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி விவசாயிகள் ஒரு மாதம் கழித்து தங்களுடைய விளைபொருட்களை இலாபகரமான விலைக்கு விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. என மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சாந்திராணி தெரிவித்துள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo