Onetamil News Logo

தொலைத்தொடர்பு  அஞ்சலக ஃபிலாட்டிலி துறை 8 ஜூலை 2021  தேதி இந்திய மாநிலங்களில் செயல்படும் 31 அஞ்சல்தலை சேகரிப்பு செயலகங்கள் விடுவிக்கப்படுவதாக இயக்குனர்  அறிவித்துள்ளார்.

Onetamil News
 

தொலைத்தொடர்பு  அஞ்சலக ஃபிலாட்டிலி துறை 8 ஜூலை 2021  தேதி இந்திய மாநிலங்களில் செயல்படும் 31 அஞ்சல்தலை சேகரிப்பு செயலகங்கள் விடுவிக்கப்படுவதாக இயக்குனர்  அறிவித்துள்ளார்.


திருச்சி 2021 ஜூலை 11:தொலைத்தொடர்பு  அஞ்சலக ஃபிலாட்டிலி துறை 8 ஜூலை 2021  தேதி இந்திய மாநிலங்களில் செயல்படும் 31 அஞ்சல்தலை சேகரிப்பு செயலகங்கள் விடுவிக்கப்படுவதாக இயக்குனர்  அறிவித்துள்ளார்.
 அதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில்  திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி யூனியன் பிரதேச அஞ்சல் தலை சேகரிப்பு செயலகங்கள் 23&24வது வரிசை எண்ணில் இடம்பெற்று உள்ளது.  அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்  திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்பு செயலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். ஃபிலாட்டிலி சேகரிப்புத் கலை வளர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அஞ்சல் தலை சேகரிப்பாளரும் திருச்சிராப்பள்ளி ஃபிலாட்டிலி கிளப் செயலருமான விஜயகுமார் கூறுகையில், அஞ்சல்தலைகள், முத்திரை பதிப்பு, கடித உறைகளில், அஞ்சல் அட்டைகள் மீது உள்ள அஞ்சல்தலைகள், முத்திரை பதித்தல் உள்ளிட்ட வரலாற்று ஆய்வை பற்றி கூறுவது ஃபிலாட்டிலி ஆகும்.
 ஆசை அல்லது விருப்பம் என்று பொருள் தரும் பிலோ என்ற வார்த்தையையும் வரிவிலக்கு என்று பொருள் தரும் அட்டிலியா என்ற இரண்டு கிரீக் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்து ஃபிலாட்டிலி என்ற சொல்லை 1862 ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஹேர்பின் என்ற பிரெஞ்சுக்காரர் உருவாக்கினார். அஞ்சல்தலை சேகரிப்பு பொழுதுபோக்கினை கிங் ஆப் ஹாபீஸ் என்று அழைப்பர்.தமிழ்நாடு அஞ்சலக வட்டம் பரப்பளவு ஒரு 1,30,511 கிலோமீட்டர் ஆகும். தமிழ் நாட்டுடன் யூனியன் பகுதியான புதுச்சேரியையும் கொண்டுள்ளது.   தமிழ்நாடு அஞ்சல் வட்டம் முதன்மை தலைமை அஞ்சல் துறை தலைவர் தலைமையின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாடு வட்டத்தில் வடக்கு மண்டலம் சென்னையிலும், மேற்கு மண்டலம் கோயம்புத்தூரிலும், தெற்கு மண்டலம் மதுரையிலும், மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளியி லும் அமைந்துள்ளன.  தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 இடங்களில் அஞ்சல் தலை சேகரிப்பு செயலகங்கள் செயல்பட்டு வந்தன. 
அஞ்சல் தலை சேகரிப்பு செயலகங்களில் அஞ்சல்தலை சேகரிப்பு  பொருட்களை விற்கின்றன. அஞ்சல் தலை சேகரிப்பு மேம்பட செய்வதில் தமிழ்நாடு முன்னோடி வட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறும் உண்டு.  அஞ்சல்தலை சேகரிப்பு செயலகத்தில்
கலை,கலாச்சாரம், பண்பாடு,பாரம்பரியம், வரலாறு, முக்கிய நிகழ்வுகள், ஆளுமை ஆகியவற்றை மையப்படுத்தி, சிறப்பு அஞ்சல் உறை, தபால் அட்டைகள், முத்திரைகள் போன்றவற்றை வெளியிடுவதும், அஞ்சல் தலை கண்காட்சி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அஞ்சல் துறையின் அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவு, தபால் பொருட்களின் வடிவமைப்பு, அச்சிடுவது மற்றும் வெளியிடுதல் பணியை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை சேகரிப்பு மையமானது 21 டிசம்பர் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். தற்போது 40 ஆவது ஆண்டில் தடம் பதித்து வருகின்றது. திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலத்தில் அஞ்சல்தலை சேகரிப்பு சங்கங்களும், பள்ளிகளில் சேகரிப்பு குழுக்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மத்திய மண்டல அஞ்சல் தலை சேகரிப்பு செயலகம் திருச்சிராப்பள்ளி விளக்கப் படுவதாக அஞ்சலக ஃபிலாட்டலி இயக்குனர் அறிவித்துள்ளது
தபால் தலை சேகரிப்பாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. 
திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டுவரும் மத்திய மண்டல அஞ்சல் தலை சேகரிப்பு செயலகம் மூடப்படுவதால் திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ,கரூர், விருத்தாச்சலம், கடலூர் உள்ளிட்ட கோட்டங்களில் உள்ள அஞ்சலக சேகரிப்பாளர்கள் பெரிதும் பாதிப்பார்கள்.
ஏற்கனவே இந்தியாவில் 12 சேகரிப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளது.  தற்போது 31 சேகரிப்பு மையங்கள் மூடப்பட்டு உள்ளது என்றார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo