மாப்பிள்ளையூரணி மரத்தடியில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூன் 3 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மரத்தடியில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஜூன் 3 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து அணியினரும் திமுகவின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச்சென்று மக்கள் பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். அதே போல் மாநில இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் விளையாட்டுதுறை மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் 1கோடி திமுக புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலின் போது இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் தக்க சமயத்தில் வழங்கப்படும். என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆலோசனையின் படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் மரத்தடியில் உறுப்பினர் சேர்க்கை முகாமினை தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அணி சார்பில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கப்பாண்டி,சேசு, ,கிளைச்செயலாளர்கள் ரத்தினகுமார், சந்திரசேகர், ஜெயபாண்டி,பி சந்திரசேகர்,காசி,வெற்றிவேல், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஆர் கணேசன்,ஒன்றிய இளைஞரணி ஸ்டாலின், முன்னாள் வார்டு உறுப்பினர் ஆனந்தகுமார், தங்க மாரிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் ராமச்சந்திரன் சவேரியார் புரம் ராயப்பன், ஜாஸ் சேவியர், ரூபி, வளர்மதி,உட்பட பலர் பங்கேற்றனர்.