Onetamil News Logo

ஓட்டபிடாரம் காவல் நிலையம் முன்விரோதம் காரணமாக தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது 

Onetamil News
 

ஓட்டபிடாரம் காவல் நிலையம் முன்விரோதம் காரணமாக தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது 


தூத்துக்குடி 2021 செப் 16 ;தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் காவல் நிலையம் முன்விரோதம் காரணமாக தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
ஓட்டப்பிடாரம் ஓசனூத்து பகுதியை சேர்ந்த வடிவேல் மகன் பால்ராஜ் (60) என்பவர் கடந்த 11.09.2021 அன்று ஓட்டபிடாரத்தில் இம்மானுவேல் சேகரன் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட போது அங்கு மதுபோதையில் வந்த ஒட்டப்பிடாரம் ஓசனூத்து பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சிவனைந்த பெருமாள் (37) என்பவர் பால்ராஜிடம் தகராறு செய்ததில் பால்ராஜ் சிவனனைந்த பெருமாளை சத்தம் போட்டுள்ளார்.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 14.09.2021 அன்று  சிவனைந்த பெருமாள் ஓட்டப்பிடாரம் பகுதியில் வைத்து பால்ராஜிடம் தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 
இதுகுறித்து பால்ராஜ் நேற்று அளித்த புகாரின் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து சிவனைந்த பெருமாளை கைது செய்தார்.
மேலும் எதிரி சிவனைந்த பெருமாள் மீது ஏற்கனவே ஒட்டபிடாரம் காவல் நிலையத்தில் திருட்டு, கொலை மிரட்டல் வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo