Onetamil News Logo

மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார்!

Onetamil News
 

மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமனார்!


கணவனை இழந்த மருமகளை மாமனாரே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
             சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 21 வயதான ஆர்த்தி சிங் என்ற இளம் பெண், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜ்புத் சிங் என்பவரின் மகன் கவுதம் சி்ங்கை, திருமணம் செய்துள்ளார்.
இவர்களது திருமண வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து ஒன்றில், கவுதம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் உயிரிழந்த நிலையில், விதவையான இளம் பெண் ஆர்த்தி சிங், தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். ஒரு ஆண் துணை இல்லாமல் இளம் பெண்கள் பெரும்பாலும் படும் வேதனைகளை அவர் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, தனது மருமகளை மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங், மிகவும் கனிவோடும், அன்போடும் பார்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆண் துணை இல்லாமல் சிறு வயதிலேயே கணவனை பறிகொடுத்த அந்த இளம் பெண்ணை, மாமனாரையே திருமணம் செய்து கொள்ள அந்த பகுதியினர் சிலர், அந்த இளம் பெண்ணுக்கும், மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங்கிற்கும் ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.
இதனையடுத்து, இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள பெரிய மனிதர்கள் சிலரிடம் கிருஷ்ணா ராஜ்புத் சிங், ஆலோசனை நடத்தி உள்ளார். அதற்குப் பலரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அத்துடன், தனது மாமனார் மிகவும் அன்பாகவும், பொறுப்பாகவும் மருமகளை நன்றாகக் கவனித்துக்கொண்டு வந்ததால், மாமனாரையே திருமணம் செய்து கொள்ள, மருமகள் பூரண சம்மதம் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய அரசின் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு, ராஜ்பூத் க்ஷத்ரிய மகா சபாவினர் திருமணத்திற்கான முழு ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.
அதன்படி, ராஜ்பூத் க்ஷத்ரிய மகா சபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில், தன் சொந்த மருமகளை, அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங்கே, முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு, அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, சத்தீஸ்கரில் கணவனை இழந்து 2 வருடங்களாகத் தனிமையில் வாடிய மருமகளை, சொந்த மாமனாரே திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo