Onetamil News Logo

தூத்துக்குடியில்  மஹாராஜ் மசாலா சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. 

Onetamil News
 

தூத்துக்குடியில்  மஹாராஜ் மசாலா சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. 


தூத்துக்குடி அக்டோபர் சனிக்கிழமை 7 ; தூத்துக்குடியில்  மஹாராஜ் மசாலா சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.                                                                                                                                                                                
      தூத்துக்குடி கிருஷ்ணராஜ புரத்தில் உள்ள மஹாராஜ் மசாலா நிறுவனம் தென் தமிழகத்தில் நம்பர் ஒன்னாக திகழ்ந்து வருகிறது.இந்த நிறுவனம் சார்பில் இன்று தூத்துக்குடியில் வாழும் மக்களுக்காக இலவச மருத்துவ முகாமை கிருஷ்ணராஜபுரம் முதல் தெரு மெயின் ரோட்டில் உள்ள இன்பன்ட் மெட்ரிக் மேல்நிலையப்பள்ளி வளாகத்தில் நடத்தியது. இம் முகாமில் தோல் மருத்துவம்,காது தொண்டை ,குழந்தைகள் நலன்,மகளிர் நலன்,கண் சிகிக்சை,பொது மருத்துவம் உட்பட  மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.                                                                                           
                               இந்த மருத்துவ முகாமுக்கு போல் பேட்டை சேகரம் தூய மிகாவேல் ஆலய ஐயர் ஜே.ஏ.டி.மனோகர் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் ,மாவட்ட காவல் அலுவலக நுண்கதிர் பிரிவு ஆய்வாளர்  குணசேகரன் ,ஹலோ எப்.எம் நிலைய மேலாளர்  இ.ர.சகாயராஜ்,மஹாராஜ் மசாலா உரிமையாளர் எம்.பாஸ்கர் ,போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலையப்பள்ளி தலைமையாசிரியரும், இன்பன்ட் மெட்ரிக் மேல்நிலையப்பள்ளி நிர்வாகியுமான ஜெபக்குமார்,  மஹாராஜ் மசாலா மேலாளர் டி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.                                                                   
      முகாமில் தோல் மருத்துவர்  டாக்டர்   கே.முத்துப்பாண்டி,காது மூக்கு தொண்டை டாக்டர் தங்கமணி,குழந்தைகள் நல டாக்டர் பி.குமரன்,மகளிர் நல டாக்டர் டி.ஏ.மஞ்சுளா ,ரேடியோலஜிஸ்ட் டாக்டர் புளோரா நெல்சன்,பொது நல டாக்டர் டி.கிரேஸி பாலின், மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள்,தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.                         
   முகாமிற்கு ஐ.எம்.எஸ் இயக்குனர் டி.எஸ்.செல்வராஜ், பொது சுகாதாரத்துறையை சார்ந்த ஓய்வு பெற்ற சி.ஆனந்தன், ஐ.எம்.எஸ் உறுப்பினர்கள்  ஆர்.செல்வின் கிறிஸ்டோபர்,எஸ்.நிமிதா,சீலன் சுருதி  இன்னிசை குழுவை சார்ந்த சீலன்  உட்பட பலர் கலந்து கொண்டனர்,  இம் முகாமில் 800 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவத்தை பயன் பெற்றார்கள்.    
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo