தூத்துக்குடி மாவட்டத்தில் கனரக தாது மணல் (கார்னட், இல்மனைட், ரூட்டைல் மற்றும் இதர கனிமங்கள்) சுரங்க குத்தகை உரிமம் தடை
தூத்துக்குடி மே 4 ; கனரக தாது மணல் (கார்னட், இல்மனைட், ரூட்டைல் மற்றும் இதர கனிமங்கள்) சுரங்க குத்தகை உரிமம் தடை தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசு அனுமதியின்றி கனிமங்களை குவாரி செய்தல், எடுத்து செல்லுதல் தடுப்பு மற்றும் கனிம வணிகர் விதி 2011-ல் விதி 3ன் படி எந்த ஒரு கனிமத்தையும், எந்தவொரு நபரும் உரிய நடைச்சீட்டு இல்லாமல் எடுத்து தண்டனைக்குரிய குற்றமாகும்.
அனுசக்தி தாது (சலுகை) தாது விதிகள் 2016 ன் படி (விதி 2(ந)) கார்னட், இலுமினட், ஸிர்கான் ரூட்டைல் போன்ற கனிமங்கள் அணுசக்தி கனிமங்களாக
சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வின் 11.01.2017 தேதிய தீர்ப்பின்படி ( 1168 ரூ 1169ஃ2015 யனெ றுP 1592ஃ2015) தமிழ்நாடு அரசு பல்வேறு மத்தியஃமாநில அரசு துறைகளை சார்ந்த வல்லுனர்கள் கொண்ட குழுவை சத்தியபிரதா சாகு தலைவராக கொண்டு நியமித்து தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றம் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கனரக தாது மணல் இருப்பு விவரம் ((WA 1168 & 1169/2015 and WP 1592/2015) ) குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்திரவிடப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டு கனரக தாது மணல் இருப்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யாரேனும் தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலங்களிலோ, அரசு புறம்போக்கு நிலங்களிலோ, கடற்கரை பகுதிகளிலோ, சட்டவிரோத சுரங்கப் பணிகள் நடைபெறுவது தெரிய வந்தாலும், குடோன் உரிமையாளர் கனரக தாது மணல் இருப்பு வைப்பதற்கு கிடங்கை வாடகைக்கு அனுமதித்திருந்தாலும் அதைப் பற்றிய வபரத்தை மாவட்ட ஆட்சியர் சார் ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தெரியப்படுத்த வேண்டிய தொலைபேசி எண்
மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி 9444186000 collrtut@nic.in
மாவட்ட வருவாய் அலுவலர் 9445000929
சார் ஆட்சியர், தூத்துக்குடி 9445000479
வருவாய் கோட்டாட்சியர், கோவில்பட்டி 9445000481
வருவாய் கோட்டாட்சியர், திருச்செந்தூர் 9445000480
மேலும் கனரக தாது மணல் கனிமங்களுக்கு உரிமையுடைய நபர் வேறொருவரின் குடோனை வாடகைக்கு எடுத்து இருந்தாலும் அல்லது குடோனை வாடகைக்கு கொடுத்த நபர் ஆகிய இருவரும் தாமாகவே முன்வந்து மேற்கண்ட அலுவலர்களிடம் இவ்வறிக்கை வெளிவந்து 7 நாட்களுக்குள் எழுத்துமூலமாக தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் யாருக்கேனும் மேற்குறிப்பிட்ட விபரங்கள் தெரிந்திருக்கும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
அவ்விதம், தெரியப்படுத்தாமல், பின்னர் கண்டறியப்பட்டால், அனைவரின் மீதும் சுரங்க மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஓழுங்குபடுத்துதல்) சட்டம் 2015-ன் பிரிவு 21-ன் படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.