Onetamil News Logo

தூத்துக்குடியில் மூலிகை சாறு மூலம் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோயை குணப்படுத்தும் மெக்கானிக்

Onetamil News
 

தூத்துக்குடியில் மூலிகை சாறு மூலம் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோயை குணப்படுத்தும் மெக்கானிக்


தூத்துக்குடி 2020 மார்ச் வெள்ளி 21 ;தூத்துக்குடியில் கொடிய நோயாளிகள் இருக்கும் மாநகரில் மூலிகை சாறு விற்பனை செய்து  எதிர்ப்பு சக்தியை உருவாக்கி நோயை குணப்படுத்தி வருகிறார் மெக்கானிக்
தூத்துக்குடி மாநகரில் கடந்த 2004 ம் ஆண்டு நிலவரப்படி 2555 நபர்கள் புற்று நோயாளிகளாக இறந்து உள்ளனர்.என்பது குறிப்பிடத்தது. இதை கருதி ,நோயாளிகள் இல்லாத நகரமாக மாற்ற முனைந்துள்ளார் மெக்கானிக் ஜெயச்சந்திரன். 
 இவர் தூத்துக்குடி ரயில்வே மேம்பாலம் கீழ் புறத்தில் இரண்டு சக்கர பழுது பார்க்கும் கடை  வைத்துள்ளார்.இவர் ஒரு இயற்க்கை ஆர்வலர் இவரது முயற்சியில் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோர் மூலிகை சாறு அருந்தி பல்வேறு நோய்களிலிருந்து விடுபட்டுள்ளார்கள் என்பது உண்மை, அங்கு மூலிகை சாறு குடிக்க வரும் நபர்களில் ஒருவர் முனியசாமி அவர் கூறியதாவது ..நான் கல்லடைப்பு நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டேன். நான் இங்கு வந்து மூலிகை சாறு குடித்தேன் அதிலிருந்து நான் பூரண குணம் பெற்று விட்டேன். என்று நம்மிடையே கூறினார்.அது போல இவரிடம் அருகம்புல் சாறு,பீட் ரூட் சாறு,பப்பாளி சாறு,மலை வேம்பு சாறு,என்று 12 க்கும் மேற்பட்ட சாறு வகைகளை  மக்களுக்கு வழங்கி வாழ்வில் சந்தோசப்படுகிறார். இந்த சாறு வகைகள் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை,காய்கனி மார்க்கெட்,மையவாடி பூங்கா,தருவ  விளையாட்டு அரங்கம்,ராஜாஜி பூங்கா ,இசக்கியம்மன் கோவில் அருகில், முன்பு என்று அதிகாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை இதுபோன்று 8 கிளைகள் கொண்டு மக்களுக்கு சமூகப்பணிகளைச் செய்து வருகிறார்.இவரது பணி வெல்லட்டும் என்று வாழ்த்துகிறோம்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo