Onetamil News Logo

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்தில் வெடித்ததில் 7 வீரர்கள் உயிரிழப்பு

Onetamil News
 

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் 17,000 அடி உயரத்தில் வெடித்ததில் 7 வீரர்கள் உயிரிழப்பு


புதுடெல்லி,
 இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் காலை 6 மணியளவில் 
அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங்கில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. விபத்தில் 5 விமானப்படை வீரர்கள், இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மண்ணெண்ணெய் கொண்டு சென்ற போது இந்த விபத்து நேரிட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லையில் உள்ள பகுதிகளுக்கு வழங்க ஏற்றிச் செல்லப்பட்டு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
ஹெலிகாப்டர் 17 ஆயிரம் அடி உயரத்தில் வெடித்து சிதறி உள்ளது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவர் கீழே குதித்து தப்பிக்க முயற்சி செய்து உள்ளார், ஆனால் உயிர்பிழைக்கவில்லை. இந்தியா - சீனா எல்லையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் பகுதியில் விபத்து நேரிட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவ தளபதில், இப்போதைய மத்திய மந்திரி வி.கே. சிங் பேசுகையில், “இது மிகவும் வருத்தத்திற்குரிய சம்பவம். மோதலுக்கு வழிவகை செய்ய அதிகமான காரணங்கள் உள்ளது. வானிலை அல்லது தொழில்நுட்ப பிரச்சனையாக இருக்கலாம்.இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையானது வெளியாகும் முன்னதாக நான் கருத்து தெரிவிக்க கூடாது,” என குறிப்பிட்டு உள்ளார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo